Elon Musk தன்னுடைய கடைசி சொத்தை விற்கிறாராம்: விலையை கேட்டா சும்மா அதிருது!!
உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க், உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த ஒரு நபராவார். பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் அவரை இளைஞர்கள் ஆதர்ஷ நாயகனாக பார்க்கிறார்கள்.
கலிபோர்னியா: உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க், உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் சக்தி வாய்ந்த ஒரு நபராவார். பலருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் அவரை இளைஞர்கள் ஆதர்ஷ நாயகனாக பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு தனது வீடுகளையும் சொத்துக்களையும் விற்கும் திட்டத்தை அவர் அறிவித்தார்.
எலன் மஸ்க் தன் சொத்துகளை விற்கிறார்
கடந்த ஆண்டு தனது சொத்துகளை விற்கத் தொடங்கிய எலன் மஸ்க் (Elon Musk), தனது கடைசி சொத்தையும் விற்கவுள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலன் மஸ்க் தன்னிடம் மீதமுள்ள கடைசி சொத்தான தனது வீட்டை விற்க விரும்புவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சான் பிரான்சிஸ்கோ பே பகுதியில் அவருக்கு ஒரே ஒரு வீடு இருப்பதாகவும், அதை பெரிய நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடலாம் என்றும் கடந்த வாரம் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் தகவல் அளித்தார்
இந்த வீட்டை வாங்கி அதில் வசிக்க தான் ஒரு பெரிய குடும்பத்தைத் தேடுவதாக எலன் மஸ்க் தனது ட்வீட்டில் (Twitter) எழுதியுள்ளார். இந்த வீடு அவருக்கு மிகவும் நெருக்கமானது என்று அவர் கூறியுள்ளார். அவரிடம் பே பகுதியில் ஒரே ஒரு இவெண்ட் ஹவுஸ்தான் உள்ளது என்றும் எலன் மஸ்க் கூறியுள்ளார். இந்த வீட்டை ஒரு சிறிய குடும்பத்துக்கு விற்றால், இந்த வீடு சரியாகப் பயன்படுத்தப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ALSO READ: No Driver Car Accident: எலன் மஸ்கின் டெஸ்லாவின் தானியங்கி காரின் மோசமான விபத்து
ஜில்லோ என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது
பிசினஸ் இன்சைடரின் கூற்றுப்படி, மஸ்கின் சொத்து ஜில்லோ என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஒரு ரியல் எஸ்டேட் வலைத்தளம் ஆகும். இந்த சொத்து 37.5 மில்லியன் டாலருக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எலன் மஸ்க் இதை 2017 ஆம் ஆண்டில் 23 மில்லியன் டாலருக்கு வாங்கினார்.
47 ஏக்கரில் சொத்து
இந்த சொத்து 47 ஏக்கர் பரப்பளவில் உள்ளது மற்றும் இது கலிபோர்னியாவின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாகும். இந்த சொத்து 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இங்கு 12 கார் பார்க்கிங் வசதி உள்ளது. இந்த சொத்தில் ஜிம், பூல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் எலன் மஸ்க்கினுடையதுதான்
தி ஸ்பேஸ்எக்ஸின் (The SpaceX) நிறுவனத்தின் நிறுவனரான எலன் மஸ்க், பல விண்வெளி முயற்சிகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். விண்வெளித் துறையில் எலன் மஸ்க்கிம் ஸ்பேஸ் எக்ஸ் நிறிவனம் ஒரு மிகப்பெரிய சக்தியாக வருங்காலத்ல் உருவெடுக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ALSO READ: SpaceX அதிக செயற்கைக்கோள்களை செலுத்துவது ஏகபோகமாக மாறக்கூடும் - Arianespace
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR