எலன் மஸ்க்கின் நிறுவனம் ஸ்டார்லிங்க் திட்டத்தில் வெற்றிகரமாக முன்னேறிக்க் கொண்டிருக்கிறது. இது ஒரு மைல்கல் திட்டமாக இருக்கும் என்று மஸ்க் கூறும் நிலையில், அவரது போட்டி நிறுவனத்தின் கருத்து மாறுபட்டதாக இருக்கிறது.
ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் போட்டி நிறுவனமான அரியன்ஸ்பேஸ் (Arianespace) தலைவர் ஸ்டீபன் இஸ்ரேல் (Stephane Israel), இது ஏகபோகத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார். பூமியின் தாழ்வு சுற்றுப்பாதையில் அதிகமான செயற்கைக்கோள்களை (satellites) நிலைநிறுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை அனுமதிப்பது எதிர்காலத்தில் சிக்கலை உண்டு பண்ணலாம் என்று அவர் கருதுகிறார்.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், மே 27 அன்று புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் விண்வெளி வெளியீட்டு வளாகம் 40 (எஸ்.எல்.சி -40) (Space Launch Complex 40 (SLC-40)) இலிருந்து 60 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை ஏவியது.
Also Read | Best Electric Cycles: புதிய ரேஞ்சுகளை சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது Nexzu Mobility
இதுவரை ஸ்பேஸ்எக்ஸ் சுமார் 1,600 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளுக்கு இணையத்தை வழங்கும் இந்த செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
ஐ.நா. நிதியுதவியுடன் ஜெனீவாவில் நடைபெற்ற நிலையான அபிவிருத்தி இலக்குகள் (sustainable development goals) என்ற மாநாட்டில் உரையாற்றிய ஸ்டீபன் இஸ்ரேல் (Stephane Israel), விண்வெளி மனித நடவடிக்கைகளுக்கு அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பூமியின் தாழ்வு சுற்றுப்பாதையில் அதிகமான செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அனுமதிப்பது விண்வெளியில் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கையும் விடுத்தார் ஸ்டீபன். எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளியில் ஏகபோகமாக்கிக் கொள்ளும் அபாயம் நெருங்குவதாக அவர் அச்சம் தெரிவித்தார்.
1957 முதல் 9,000 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் அனுப்பப்பட்டுள்ளன என்றும் அவற்றில் ஸ்பேஸ்எக்ஸ் 1667 செயற்கைக்கோள்களை ஸ்டார்லிங்கிற்கு அனுப்பியுள்ளது. செயல்பாட்டில் உள்ள அனைத்து செயற்கைக்கோள்களிலும் 35 சதவீதம் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமானது என்பதை இஸ்ரேல் சுட்டிக் காட்டினார்.
அண்மை ஆண்டுகளில் பல செயற்கைக்கோள்கள் மோதிக் கொண்டதையும் அவர் குறிபிட்டார். அவற்றில் குறைந்தது இரண்டு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் சம்பந்தப்பட்டவை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்பபடுகள், உலகையே பேரழிவு சூழ்நிலைக்கு தள்ளலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
Also Read | "மேயாத மான்” பட இயக்குனர் குடும்பத்தில் 14 பேரை மேய்ந்து தீர்த்த கொரோனா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR