No Driver Car Accident: எலன் மஸ்கின் டெஸ்லாவின் தானியங்கி காரின் மோசமான விபத்து

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஓட்டுநர் இல்லா தானியங்கி கார் ஏற்படுத்திய விபத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 19, 2021, 09:19 AM IST
  • தானியங்கி கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலி
  • எலோன் மஸ்கின் நிறுவனம் தயாரித்த கார்
  • வாகனம் மரத்தில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழப்பு
No Driver Car Accident: எலன் மஸ்கின் டெஸ்லாவின் தானியங்கி காரின் மோசமான விபத்து title=

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஓட்டுநர் இல்லா தானியங்கி கார் ஏற்படுத்திய விபத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

இது டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலோன் மஸ்கின் நிறுவனம் தயாரித்த கார் ஆகும். சனிக்கிழமையன்று ஹூஸ்டனுக்கு வடக்கே இரவு ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்த  டெஸ்லா வாகனம் மரத்தில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹூஸ்டனுக்கு வடக்கே சனிக்கிழமை பிற்பகுதியில் வாகனம் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தபோது, அது ஒரு மரத்தில் மோதி தீப்பிடித்ததாக  வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) தெரிவித்துள்ளது, ஹாரிஸ் கவுண்டி கான்ஸ்டபிள் மார்க் ஹெர்மன் இவ்வாறு தெரிவித்ததாக Wall Street Journal கூறுகிறது.

Also Read | ICC T20 2021 உலகக் கோப்பைக்காக இந்தியாவில் 9 இடங்கள் தேர்வு
 
"விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான வாகனத்தின் சக்கரத்தில் யாரும் சிக்கிக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஆனால் இன்னும் விசாரணை முழுமையடையவில்லை," என்று காவல்துறை அதிகாரி கூறினார். "இதை கிட்டத்தட்ட 99.9 சதவிகிதம் உறுதியாக சொல்லமுடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.

விபத்து நடந்தபோது காரின் முன்புற இருக்கையில் பயணிகள் இருக்கையில் ஒருவரும் மற்றவர் பின் இருக்கையிலும் அமர்ந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Also Read | ஷிகர் தவானின் அதிரடியால் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

விபத்து நடந்த நேரத்தில் டிரைவர் பக்க ஏர்பேக் பயன்படுத்தப்பட்டதா, காரின் டிரைவர் உதவி அமைப்பு செயல்பட்டதா என்பதை போலீசார் இன்னும் தீர்மானிக்கவில்லை.

”தானியங்கி கார்களுக்கு வழங்கும் ஓட்டுநர் உதவி அமைப்புகள் தங்கள் வாகனங்களை முழுமையாக இயக்கிவிடும் என்பத உறுதியாக கூறமுடியாது என்றும், அதை மேற்பார்வை செய்வது அவசியம் என்றும்” டெஸ்லாவின் இணையதளத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

ஆனால் வழக்கமாக டெஸ்லாவின் தானியங்கி காரில் பயணிப்பவர்களின் வாகனத்தில் ஓட்டுநர்கள் தூங்குவதை பார்க்க முடிகிறது. அல்லது நீண்ட நேரம் ஸ்டியரிங்கில் கைகள் இல்லாமல் இருப்பதை வீடியோக்களில் பார்க்க முடிகிறது.

சமீபத்திய விபத்துக்களைத் தொடர்ந்து டெஸ்லாவின் அரை தானியங்கி ஓட்டுநர் அமைப்பு (Semi-automated driving system) குறித்த ஆய்வுகள் அதிகரித்து வருவதோடு, அதன் புதுப்பிக்கப்பட்ட "முழு சுய-ஓட்டுநர்" மென்பொருளை அதிக வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Also Read | LICயில் வேலை பார்ப்பவரா? அடித்தது ஜாக்பாட்!  

மார்ச் மாதத்தில் டெஸ்லா வாகனங்கள் விபத்துக்குள்ளானது குறித்து 27 விசாரணைகள் நடைபெற்றுவருவதாக அமெரிக்க வாகன பாதுகாப்பு நிறுவனம் கூறியதாக தெரிவித்திருந்தது; மூன்று விபத்துக்கள் அண்மையில் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

முழு சுய-ஓட்டுநர் மென்பொருளிலிருந்து பெரும் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ஜனவரி மாதம் தெரிவித்தார், "இந்த ஆண்டு மனிதனை விட நம்பகத்தன்மையுடன் தானியங்கி கார்கள் இயங்கும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது" என்று அவர் கூறியிருந்தார்.

வணிக ரீதியான வெற்றியை அடைய டெஸ்லாவின் கார்கள் அடைய வேண்டுமானால், சுய-ஓட்டுநர் தொழில்நுட்பம் (Self-driving technology) பாதுகாப்பு  மற்றும் ஒழுங்குமுறை தடைகளை (safety and regulatory hurdles) அது கடக்க வேண்டும்.

Also Read | IPL 2021, MI vs SRH: மும்பை இந்தியன் அணி, ஹைதராபாத் அணியை வெற்றி கண்டது

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News