அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோவில் உள்ள வீட்டில் FBI சோதனை நடத்தியது. இந்த தகவலை அளித்த டிரம்ப், ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மட்டுமே இதுபோன்ற "தாக்குதல்" நிகழ்கிறது என்று கூறினார். புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். "இது நம் நாட்டிற்கு மோசமான நேரம், ஏனென்றால் புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள மார்-ஏ-லாகோவில் உள்ள எனது அழகான வீடு FBI முகவர்களின் ஒரு பெரிய குழுவால் சுற்றி வளைக்கப்பட்டு, சோதனையிடப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். முன்னாள் அதிபர் யாருக்கும் இது போல் நடந்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்மந்தப்பட்ட அரசு அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளித்தும், எனக்கு தெரிவிக்காமல் என் வீட்டில் சோதனை நடத்துவது முறையல்ல,'' என்றார். 2020 ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகு டொனால்ட் டிரம்ப் தனது புளோரிடா இல்லத்தில் ரகசிய பதிவுகளை மறைத்து வைத்தாரா என்பதை அமெரிக்க நீதி அமைச்சகம் விசாரித்து வருகிறது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய தயாராகி வரும் நிலையில் அவரது வீட்டில் FBI சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விந்தணு - கருமுட்டை இல்லாமல் இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாகியுள்ள செயற்கை கரு!


அதாவது ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மட்டுமே இது போன்ற தாக்குதல் நடக்கும் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். "துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்கா இது போன்ற நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது, இந்த அளவு அதிகார துஷ்பிரயோகமும், மோசமான நடவடிக்கைகளும் இதற்கு முன்பு அமெரிக்காவில் காணாத ஒன்று. இது நமது தேசத்திற்கு இருண்ட காலமாகும்," என்று அவர் கூறினார். 


சோதனை நடவடிக்கை உயர் மட்ட அரசியல் இலக்குகளை குறிவைக்கும் செயல் என்று அவர் குற்றம் சாட்டினார். "அமெரிக்காவின் சிறந்த மக்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்," என்று அவர் கூறினார். ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தைத் தாக்கிய கும்பலைத் தூண்டியதாகக் கூறப்படும் மற்றொரு வழக்கிலும் டிரம்ப் விசாரணையை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஜி ஜின்பிங்கின் அடக்குமுறை... வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் 6,00,000 சீனப் பிரஜைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ