ஹவானா:  ஃபிடல் காஸ்ட்ரோ இறுதி சடங்கு வரும் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் என கியூபா அரசு தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி கியூபாவில் 9 நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று கியூபா அதிபர் கூறியுள்ளார். 50 ஆண்டுகளை தனது கையில் வைத்து இருந்த, கியூபாவில் கம்யூனிசத்தை நிறுவிய அந்த சரித்திர நாயகன் இன்று காலமானார். ஃபிடல் காஸ்ட்ரோ காலமானதாக அவரது சகோதரரும், கியூபாவின் அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். கியூபாவின் அரசுத் தொலைக்காட்சியும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.


1953ல், ஜூலை 26-ம் தேதி ஃபிடல் காஸ்ட்ரோ தனது சகோதரர் ரவுலுடன் இணைந்து தனது புரட்சிகர கன்னிப் பேச்சை துவக்கினார். இந்தப் பேச்சால் இவர் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார். 


ஃபிடல் காஸ்ட்ரோ அவரது ஆதரவாளர்களும் மெக்சிகோவிற்கு சென்றனர். அங்குதான், அர்ஜென்டினாவின் புரட்சிகர தலைவர் சே குவேராவை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின்னர் சேகுவேராவுடன் இணைந்து ஃபிடல் கியூபாவுக்கு வந்தார். 


1959-ம் ஆண்டு சேகுவாரா உதவியுடன் புரட்சியின் மூலம் தனது நாட்டைக் கைப்பற்றினார். இதன் பின்னர் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமராக அறிவிக்கபட்டார். 


2006, ஜூலை 31-ம் தேதி, ஃபிடல் காஸ்ட்ரோவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. நாட்டின் பொறுப்பை அவரது சகோதரர் ரவுல் ஏற்றுக் கொண்டார். நாட்டின் அதிபரானார் ரவுல். வயதானாலும் தனது சகோதரருக்கு ஆலோசனைகள் தெரிவித்தார். 50 ஆண்டுகளை தனது கையில் வைத்திருந்த, கியூபாவில் கம்யூனிசத்தை நிறுவிய அந்த சரித்திர நாயகன் இன்று காலமானார். 


அவரது இறுதிச்சடங்கு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் என்ற அவரது சகோதரரும் கியூபா அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். இன்று முதல் கியூபாவில் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுவதால் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அனைத்து அரசு நிகழ்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் ரவுல் காஸ்ட்ரோ கூறியுள்ளார்.