கொரோனா வைரஸால் படிக்கப்பட்டு இருந்த முதல் நபர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் உள்ள யுகான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் இறுதியில் பரவிய கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 65 பேர் உயிர் இழந்துள்ளனர். புதிதாக, 3,887 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை, 24 ஆயிரத்து, 324 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 3,219 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர். நாட்டில் உள்ள, 34 மாகாணங்களில், 31 மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது. 


சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து நாட்டில் அதிகம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு தாய்லாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர் தற்போது தாய்லாந்தில் குணமாகியுள்ளதாக செய்தி வெளியானது.


இது தொடர்பாக தாய் பொது சுகாதார அமைச்சர் அனுடின் சார்ன்விராகுல் கூறுகையில்.,


கொரோனா வைரஸால் படிக்கப்பட்டு இருந்த முதல் நபர் முழுமையாக குணமாகியுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மீதமுள்ள நோயாளிகள் குணமடைந்து வருகிறார்கள், மேலும் எதிர்காலத்தில் அவர்கள் குணமைடைந்ததாக அறிவிக்கப்படுவார்கள். என்று கூறினார்.