தாலிபான்களை பாராட்டும் ஒரு காலம் வரும் யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால், கல்லுக்குள் ஈரம் உண்டு என்ற பொன்மொழியை உண்மையாக்கியுள்ளார்கள் ஆப்கானின்ஸ்தானின் தாலிபன் ஆட்சியாளர்கள்.
 
கொடூரமான தலிபான்கள் அப்படி என்ன நல்ல முடிவை எடுத்தார்கள் தெரியுமா?   ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் காடுகளை வெட்டுவதற்கும் மரங்களை வர்த்தகம் செய்வதற்கும் தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தாலிபான்களின் ஒரு ஆக்கப்பூர்வ முயற்சி என்று சர்வதேச நாடுகள் பாராட்டுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் பழக்கமும் வழக்கமும் மட்டும் மாறாது என்பதுபோல, தடையை மீறுபவர்களுக்கான தண்டனை மட்டும் தாலிபன் ஸ்டைலில் தான் கொடுக்கப்படும்.


Read Also | ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, பலர் காயமடைந்தனர்
 
காடுகளை வெட்டுவதற்கு தலிபான்கள் தடை விதித்தனர்
விறகு விற்றாலும் தண்டனை வழங்கப்படும் என்றும் தால்பன்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் மக்களின் வாழ்க்கை, தாலிபான்களின் ஆட்சியில் சிக்கலாகிவிட்டது.


அவர்களுடைய விசித்திரமான மற்றும் கொடூரமான கட்டுப்பாடுகள் காரணமாக தால்பன்கள் இதுவரை கடும் கண்டனங்களை எதிர்கொண்டு வந்த நிலையில், ஓரளவிற்கு பாராட்டக்கூடிய முடிவாக இது பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினையில் தலிபான்களை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆதரிக்கின்றனர்.  


மர வியாபாரம் சட்டவிரோதமானது
பாகிஸ்தான் செய்தி போர்டல் 'உருதுபாயிண்ட்' (UrduPoint) அறிக்கையின்படி, தலிபான் அரசு காடுகளை வெட்டுவதற்கும் விறகு விற்பதற்கும் தடை விதித்துள்ளது. இது குறித்து பேசிய தலிபானின் உயர்மட்ட செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், அரசு மர வர்த்தகத்தை சட்டவிரோதமாக்கியுள்ளது என்று கூறியுள்ளார். சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த தடையை கண்காணித்து மரங்களை பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


Read Also | மதரீதியான கலவரம்! ஹிந்து கோவில்களில் தாக்குதலை ஏற்படுத்திய கும்பல்!


ஆப்கானிஸ்தானின் மொத்த பரப்பளவில் 5 சதவிகிதம் மட்டுமே வனப்பகுதிகள் உள்ளன. பெரும்பாலான காடுகள் இந்து குஷ் பிராந்தியத்தில் அமைந்துள்ளன, நாட்டின் கிழக்கில் உள்ள மலைப்பாங்கான பகுதி. இந்த பிராந்தியத்தின் பஷ்டூன்கள் அதாவது பதான்கள் தான் இந்த காடுகளின் உரிமையாளர்களாக இருக்கின்றனர்.  


இந்த முடிவின் மூலம் பழங்குடிப் பகுதிகளில் வாழும் பதான் சமூகத்தினரை சமாதானப்படுத்த தாலிபான்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. பஷ்டூன் ஆதிக்கம் உள்ள பகுதிகளில், காடுகளை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்தது.


இத்தகைய சூழ்நிலையில், காடுகளை வெட்டுவது மற்றும் மர வியாபாரத்தை தடை செய்வதன் மூலமும், தலிபான்கள் பழங்குடிப் பகுதிகளில் மக்கள் மத்தியில் தங்களுக்கு நற்பெயரை ஏற்படுத்த ஆப்கன் ஆட்சியாளர்கள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.  


Also Read | இந்தியா 6வது முறையாக UNHRC உறுப்பினராக தேர்வு.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR