மாட்ரிட்: கொசுவால் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile Virus) என்ற நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டின் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் (Spain) தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லா பியூப்லா டெல் ரியோ நகரைச் சேர்ந்த 77 வயதான நபர் வியாழக்கிழமை இரவு இந்த தொற்று காரணமான இறந்துவிட்டதாக ஸ்பெயினின் தொலைக்காட்சி நெட்வொர்க்கான டெலிசின்கோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அந்த அறிக்கையின்படி, நோயாளி ஊருக்கு அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு அவருக்கு பல நாட்களால சிகிச்சை நடந்து வந்தது.


நாட்டின் தென் பிராந்தியமான அண்டலூசியாவில் (Andalusia) இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய வெஸ்ட் நைல் தொற்று பரவலால் இதுவரை மொத்தம் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எல் பைஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.


இந்த தொற்று முக்கியமாக அண்டலூசியாவின் இரண்டு நகரங்களை பாதித்தது - லா பியூப்லா டெல் ரியோ மற்றும் கொரியா டெல் ரியோ. இவை இரண்டும் குவாடல்கிவிர் ஆற்றின் (Guadalquivir River) கரையில் அமைந்துள்ளன.


இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது 60 ஆகும். பாதிக்கப்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் ஆண்கள் என்று ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ: COVID-19 அச்சுறுத்தல் இன்னும் 2 வருடங்களில் முடிவடையும் - WHO பகீர்!!


இந்த வைரஸ் கொசுக்களால் பரவுகிறது. இந்த கொசுக்கள் ஆற்றின் அருகாமையில் இருக்கும் இருக்கும் பகுதிகளில் பொதுவாக அதிகமாகக் காணப்படுகின்றன.


பொதுவாக குலெக்ஸ் கொசுவால் பரவும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதம் 0.1 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.


உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவீதம் பேரில் தொற்றுக்கான எந்த எந்த அறிகுறியும் தென்படுவதில்லை.


ஏற்கனவே கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஸ்பெயின், இரண்டாவது கொரோனா அலையால் பாதிக்கப்ப்டும் அபாயத்தில் உள்ளது. இப்போது இந்த புதிய வைரசால் ஏற்பட்டுள்ள மரணம் அந்நாட்டை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 


ALSO READ: COVID-19 தடுப்பு மருந்து: இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டும் ரஷ்யா!!