அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக 1000-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய தலைநகர் டெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், தொடர்ந்து விமானம் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றது.


அதேப்போல் அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு பொழிந்து வருவதன் காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் கிழக்கு கடல் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், சாலை மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


இதனால் பெரும்பான்மை விமான நிறுவனங்கள் தங்கள் விமான சேவையை ரத்து செய்தது, மேலும் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 275 விமானங்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்காவின் ரைவல் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 



அதேபோல், அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் நேற்று மட்டும் 700-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது!