ப்ளோரிடா: விமான நிலையத்தில் திடீரென பிரசவித்த சேவை நாய் ஓன்று தற்போது ட்விட்டர் ட்ரண்ட் லிஸ்டில் இணைந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதியவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவியாக இருப்பதற்கு பயிற்சியளிக்கப்பட்டு வளர்க்கப்படும் நாய்கள் சேவை நாய்கள் என்று அழைக்கப்படுகின்றன. 



ஐக்கிய நாட்டை சேர்ந்த பெண்மனி ஒருவர் தனது மகளுடன் டம்பா விமான நிலையத்தில் தங்களது சேவை நாயுடன் பயணம் மேற்கொள்ள காத்திருந்திருக்கின்றார். அப்போது திடீரென அவர்களது சேவை நாய் எலி ரிக்பி பிரசவிக்க நேர்ந்துள்ளது. விமான நிலையத்தில் வைத்து 8 குட்டிகளை ஈன்ற எலி ரிக்பியால், பயணம் மேற்கொள்ளவிருந்த அப்பெண்மனி தங்களது விமானத்தினை தவறவிட்டார் எனினும் அவர் தனது நாய் குட்டிகளின் மீது அன்பை செலுத்திய காட்சியினை விமான நிலையத்தின் அவரச பிரிவு அதிகாரிகள் படம் பிடித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.



ஈன்றெடுத்த 8 குட்டிகளில் 7 ஆண் குட்டிகளுல், 1 பெண் குட்டியும் இடம்பெற்றுள்ளது. பிரசவத்தின் போது குட்டிகளின் தந்தை நாயும் அவர்களுடன் தான் இருந்தது என விமான துறையினர் தெரிவித்துள்ளனர். நாய் குட்டிகளின் தந்தையும் சேவை நாய் என்பது குறிப்பிடத்தக்கது.



ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இச்சம்பவத்திற்கு பின்னர் விமானத்தை தவறவிட்ட பெண்மனி அடுத்த விமானத்தில் தனது 10 நாய்கள் மற்றும் மகளுடன் பிலடெல்பியா-விற்கு பயணித்துள்ளார்!