எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜாக் டோர்சி முதல் முறையாக அது குறித்து பேசியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டரை வாங்கிய பிறகு, ட்விட்டரின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி,  ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து மீண்டும் நிறுவனத்தை நடத்த உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.


இந்த வதந்திகளுக்கு பதிலளித்த ஜாக் டோர்சி மீண்டும் சமூக ஊடக தளத்திற்கு தலைமை தாங்குவாரா என்பது குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார். ட்விட்டர் நிறுவனர், சமூக ஊடக நிறுவனத்தின் தலைமையை மீண்டும் எடுக்க விரும்பவில்லை என்று தெளிவுப்படுத்தினார், எலோன் மஸ்க் கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பட்சத்தில், தான் அதில் அதிக அளவில் ஈடுபட விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.


ஜாக் டோர்சி,  டிவிட்டர் நிறுவனத்தின் 2.4% பங்குகளை வைத்திருக்கிறார். ஏப்ரல் 25 அன்று டிவிட்டர் நிறுவனத்தை $44 மில்லியனுக்கு டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் வாங்க டிவிட்டர் நிர்வாகம் ஒப்புக் கொண்ட நிலையில், ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் நிறுவனத்தின் புதிய தலைமை யார் என்பது குறித்து சிறிது தெளிவு இல்லை நிலை உள்ளது.


மேலும் படிக்க | ட்விட்டரில் டிரம்பிற்கு விதிக்கப்பட்ட தடை முட்டாள்தனமானது: எலோன் மஸ்க்


ராய்ட்டர்ஸ் ஏப்ரல் 29 அன்று, மஸ்க் ஒரு புதிய தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியிட்டது, அதே நேரத்தில் டெஸ்லா நிறுவன தலைவர் மஸ்க் தற்காலிகமாக உயர் பதவியை ஏற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.


ஜாக் டோர்சி 2008 இல் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக  பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் கடந்த ஆண்டு பிற்பகுதியில் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பராக் அகர்வாலுக்கு அந்த பொறுப்பை வழங்கினார்.


இதற்கிடையில், சமீபத்திய முன்னேற்றத்திற்கு பிறகு, ஜாக் டோர்சி  பங்குகளை வங்குவது குறித்து டோர்சியுடன் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் காட்டியது.


மேலும் படிக்க | எலான் மஸ்கின் ஆட்குறைப்பு திட்டம்; அச்சத்தில் ட்விட்டர் பணியாளர்கள்


கடந்த மாதம், எலோன் மஸ்க் ட்விட்டரைப் வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்ததை அடுத்து, அது குறித்து மிகவும் பரபரப்ப்பாக பேசபப்ட்டது. சமூக ஊடக தளத்தை கையகப்படுத்திய உடனேயே, மஸ்க் தளத்தில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்துவது பற்றி பேசினார்.


அவர் ட்வீட்களை திருத்தும் வகையில் 'எடிட்' விருப்பத்தை அறிமுகப்படுத்துவது குறித்தும், வலைத்தளத்திற்கு "பேச்சு சுதந்திரத்தை" முழுமையாக வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியானது. 


மேலும், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தடையை திரும்பப் பெறுவது குறித்தும் எலோன் மஸ்க் பேசியுள்ளார், எதிர்காலத்தில் அவர் ட்விட்டரில் மீண்டும் சேர்க்கப்படலாம் என்றும் கூறினார்.


மேலும் படிக்க | இனி ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூல்; எலோன் மஸ்கின் அதிரடி திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR