மாலியில் பிரான்ஸ் நடத்திய வான் தாக்குதலில், அல்-கொய்தா பயங்கரவாதிகளின்  50 பேர் கொலை செய்யப்பட்டனர்,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பிரான்ஸ் (France)  எடுத்த மிகப் பெரிய நடவடிக்கையில்,  50 அல்-கைதா பயங்கரவாதிகளை வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றது. புர்கினா பாசோ மற்றும் நைஜரின் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரெஞ்சு அரசாங்கம் கூறியது.


பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லே கூறுகையில், 'ஜிஹாதிகளுக்கு எதிராக பிரெஞ்சு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையில், அக்டோபர் 30 அன்று, 50 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் (Terrorist)  கொல்லப்பட்டனர், அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். சுமார் 30 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.


ட்ரோன் (Drone) தாக்குதலில்  இருந்து தப்பிக்க ஜிஹாதிகள் மரங்களுக்கு அடியில் ஒளிந்து கொள்ள முயன்றபோது, ​​பிரெஞ்சு இராணுவம் இரண்டு மிராஜ் போர் விமானங்களையும் ஏவுகணையை செலுத்தும் ட்ரோனையும் அனுப்பி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுக்கிறது. 


இராணுவ செய்தித் தொடர்பாளர் கேணல் ஃபெடெரிகா பார்பே கூறுகையில், இந்த தாக்குதலுக்குப் பின்னர் நான்கு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஒரு பெரிய அளவிலான வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் உடையையும் மீட்டுள்ளதாக அவர் கூறினார். "இந்த பயங்கரவாதிகள் இராணுவம் மீது தாக்குதலைத் திட்டமிட்டனர்" என்று பார்பே மேலும் கூறினார்.


இது தவிர, கிரேட்டர் சஹாராவில், இஸ்லாமிக் ஸ்டேட்  பயங்கரவாத அமைப்பை குறிவைத்து, நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது  இதில் சுமார் மூவாயிரம் வீரர்கள் பங்கேற்றுள்ளனர் என்றும், இது குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். 


மாலியில் அமைதிப் பணியின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபை 13,000 வீரர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அதே நேரத்தில், சஹேல் பிராந்தியத்தில் பிரான்ஸ் 5,100 வீரர்களை நிறுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி கடந்த எட்டு ஆண்டுகளாக, ஜிஹாதிகள் நடத்தும் கிளர்ச்சியைத் தடுக்க போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | ‘இம்ரான் கான் ஒரு drug addict ஆக இருந்தார்’: முன்னாள் கிரிக்கெட் வீரர் அளித்த திடுக்கிடும் தகவல்!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR