Freezing Cold: குளிர் வாட்டி வதைக்கிறது, கடுங்குளிரால் வேலை செய்ய முடியவில்லை, வட இந்தியாவில் பனிப்பொழிவு என்பது போன்ற செய்திகளை அதிகம் கேட்கும் நமக்கு, குளிர் என்பது இந்தப் பருவத்தில் அதிகம் பேசப்படும் விசயமாக இருக்கிறது. ஆனால், குளிர் நிரந்தரமாக வாசம் செய்யும் நகரத்தில் வாழ்பவர்களுக்கு, ‘குளிர்’ என்ற வார்த்தையின் அர்த்தம், நம்மை விட நன்றாகவே தெரியும். உலகின் மிகவும் குளிர் நிலவும் நாடு எது தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் கிரகத்தின் சராசரி வெப்பநிலையை விட குறைவாக இருக்கும் பூமியின் ஊர் ஒன்று உண்டு. சில நேரங்களில் இங்கு வெப்பமானி (Thermometer)  கூட செயல்படாது. பூஜ்ஜியத்திற்கு கீழே 88 டிகிரி அளவு உறைகுளிர் நிலவும் ஊர் இது. 


மேலும் படிக்க | Delhi Snow: டெல்லி கொல்கத்தாவில் இப்படி பனிப் பொழிந்தால் எப்படி இருக்கும்?


 சைபீரியாவின் ஒரு பகுதியான யாகுட்ஸ்க் பகுதியில் வசிப்பவர்கள், தற்போதைய குளிர்காலத்தில் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. பெண்களின் புகைப்படங்களில், அவர்களது அழகைவிட, அவர்களின் கண் இமைகளும் உறைந்து பனியாய் மாறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 


ரஷ்யாவின் யாகுட்ஸ்கில் வெப்பநிலை பூஜ்ஜியத்தை விட சுமார் 40 டிகிரி குறைவாக உள்ளது. ரஷ்யக் குளிர் அனைவருக்கும் தெரியும் என்றால், அந்த நாட்டில் இந்த ஊரில் இருக்கும் குளிர் மிகவும் அதிகமானது. இங்கு உள்ள அனைத்து வீடுகளும் வணிக நிறுவனங்களும் கடைகளும், ஹீட்டர் வசதிகள் இல்லாமல் இருப்பதில்லை. இங்கு, இதுவரை பதிவான குளிரிலேயே, -89.9 டிகிரி என்ற குளிர் தான் மிகவும் அதிகமான குளிராகும். 


பொதுவாக இங்கு, டிசம்பர் 1 முதல் பிப்ரவரி கடைசி வரை முதல் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் உயர்ந்ததாக இதுவரை சரித்திரமே இல்லையாம்! இப்போது சொல்லுங்கள், வட இந்தியாவில் குளிர் வாட்டி வதைக்கிறதா? 



தலைநகர் டெல்லி, கடந்த 23 ஆண்டுகளில் மூன்றாவது மிக மோசமான குளிரைப் பதிவு செய்தது. தலைநகர் டெல்லியில் 2006 ஆம் ஆண்டில் இதேபோன்ற சூழ்நிலை நிலவியது. அப்போது ​​குறைந்த வெப்பநிலை 1.9 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டது. 


பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் தூறல் மற்றும் லேசான மழை பெய்யக்கூடும், இது குளிரை கடுமையாக்கும்.  


மேலும் படிக்க | பாலியல் வாழ்க்கை பற்றி விசாரித்த பாகிஸ்தான் அதிகாரிகள்! இந்தியப் பெண்ணுக்கு கொடுமை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ