உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. கொரோனா, பொது மக்களோடு, முக்கிய உலக தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை.  ஆரம்ப காலகட்டத்தில், கொரோனா தொற்று பணியில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால், நாட்டின் தலைவர்களுக்கும் கூட கொரோனா தொற்று ஏற்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூட இதிலிருந்து தப்பவில்லை. சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், பிரான்ஸ் (France) அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் அதிபர் மாளிகையிலிருந்து வெளியான அறிக்கையில், “ பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி தெரிந்தவுடனேயே, அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தனக்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து,அவர் ஏழு நாட்களுக்கு  குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலக அளவில், தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரான்ஸில், கொரோனா (Corona) தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கு அதிகமானவர்களுக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது


சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.  இதை அடுத்து, இரவு 8 மணி முதல் காலை வரை, உணவு விடுதிகள், சினிமா அரங்குகள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். அடுத்த வருடம் ஜனவரி மாதம், கட்டுபாடுகள் சிறிது தளர்த்தப்பட்டு, சினிமா தியேட்டர்கள் உணவு விடுதிகள் திறக்கப்படும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.


உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று நோய் 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | உய்குர் முஸ்லிம்களை அடையாளம் காண சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது சீனாவின் அலிபாபா


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR