பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்வீட் செய்து  "இனவெறி மற்றும் வன்முறையை எதிர்ப்பதற்கு பதிலாக, அதிபர் மக்ரோன்  இஸ்லாம் மதத்தை எதிர்த்து வருகிறார். இது அவரது அடிப்படைவாத சிந்தனையை எடுத்து காட்டுகிறது. வன்முறையைச் செய்யும் பயங்கரவாதிகளை எதிர்க்காமல் இஸ்லாத்தைத் தாக்குவதன் மூலம் அதிபர் மக்ரோன் இஸ்லாமியப் போபியாவை ஊக்குவிப்பது துரதிர்ஷ்டவசமானது. பிரான்சின் அதிபருக்கு இஸ்லாத்தைப் பற்றி எந்த புரிதலும் இல்லை, அவர் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளார்”  என கூறியுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் பிரதமர் Imran Khan தனது ட்வீட்டில், இம்மானுவேல் மக்ரோன் இஸ்லாமோபோபியா (Islamophobia), அதாவது இஸ்லாமிற்கு எதிரான உணர்வை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.


இஸ்லாம் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பொருத்தமான பதிலடி கொடுத்துள்ளார். அமைதி உணர்வு என்பது அனைத்து வேறுபட்ட கருத்துக்களையும் மதிக்கும் தன்மை என்று ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் ட்வீட் செய்துள்ளார். 


இம்மானுவேல் மக்ரோன் தனது ட்வீட்டில், 'நாங்கள் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சமாதான உணர்வு உள்ள நாங்கள் அனைத்து வேறுபாடுகளையும் நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் வெறுப்பூட்டும் பேச்சுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.  நியாயமான விவாதங்களை எப்போது ஏற்றுக் கொள்கிறோம். நாம் எப்போதும் மனிதகுலத்தின் கவுரவத்தையும் மதிப்பையும் காத்து வருகின்றோம்” என கூறினார்


ALSO READ | பிரான்சில் வகுப்பில் நபிகள் நாயகத்தின் கார்டூனை காண்பித்த ஆசிரியர் தலை வெட்டி கொலை ..!!!


அக்டோபர் 16 அன்று, நடந்த ஒரு கொடூரமான சம்பவத்தில்,  நபிகள் நாயகத்தின் கார்ட்டூன்களை வகுப்பில் காட்டிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், வெள்ளிக்கிழமை பிற்பகல் தலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இது பிரான்ஸில் (France) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இது குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர், இஸ்லாமிய சமூகம் பிரான்ஸின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ள விரும்புவதாகவும், இஸ்லாமிய பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் கூறி, இந்த சம்பவத்தை எதிர்க்கும் வகையில் முகம்மது நபையின் சர்ர்ச்சைலுரிய கார்டூனை, அரசி கட்டிடங்களில் பிரம்மாண்டமாக திரையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ பாகிஸ்தானில் வலுக்கும் தனி பலுசிஸ்தான் போராட்டம்.. சீனாவிற்கு தலைவலியை கொடுப்பது ஏன்.!!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR