இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஆகிறார் ஜார்ஜியா மெலோனி!
இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஆகும் ஜார்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தை வழிநடத்த உள்ளார்.
இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஆகும் ஜார்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தை வழிநடத்த உள்ளார். இத்தாலியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்ற பின்னர், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக 45 வயதான ஜார்ஜியா மெலோனி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட உள்ள முதல் வலதுசாரி அரசாங்கத்தின் தலைவராகப் பதவியேற்க உள்ளார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வலதுசாரிக் கூட்டணி வலுவான பெரும்பான்மையை பெறுவார்கள் என்பதையே இப்போதைய முடிவுகள் காட்டுகின்றன, பல ஆண்டுகளாக பலவீனமான கூட்டணி ஆட்சிகளுக்கு பிறகு இத்தாலிக்கு அரசியல் ஸ்திரத்தன்மைக்கான அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது எனலாம். இருப்பினும், மெலோனியும் அவரது கூட்டணிகளும் கடினமான சவால்களை எதிர்கொள்கின்றனர், இதில் எரிசக்தி விலை உயர்வு, உக்ரைனில் போர் மற்றும் ஐரோப்பிய மண்டலத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை ஆகியவை இதில் அடங்கும்.
வெற்றிக்கு பிறகு தனது தேசியவாத பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சியின் ஆதரவாளர்களிடம் பேசிய அவர்,
"நாம் இறுதிப் புள்ளியில் இல்லை, தொடக்கப் புள்ளியில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று கூறிய மெலோனி, நாளை முதல் நாம் நமது தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறினார். இத்தாலிய மக்கள் எங்களை தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கமாட்டோம். நாங்கள் அப்படி ஒருபோதும் செய்ததும் இல்லை எனவும் மெலோனி கூறியுள்ளார்.
மேலும் படிக்க | NRI News: கனடாவில் குடியேற விரும்புவர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி!
உக்ரைன் மீதான மேற்கத்திய கொள்கையை ஆதரிப்பதாக குறிய அவர், இத்தாலியின் நிதி நிலையை கருத்தில் கொண்டு, ஆரம்ப கால நடவடிக்கைகள், தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்படும் என மெலோனி கூறினார். கடந்த 18 மாத காலங்களாக இத்தாலியில் பிரதமராக பதவி ஏற்று வந்த ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான பிரதம மந்திரி மரியோ டிராகிக்கு பிறகு மெலோனி பிரதமராக பதவியேற்கிறார்.
மேலும் படிக்க | NRI News: கனடா நாட்டின் திறமைக்கான ஆதாரமாக மாறி வரும் இந்தியா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ