NRI News: கனடாவில் குடியேற விரும்புவர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி!

கனடா அரசாங்கம் அதன் குடியேற்றம் தொடர்பான  துறையை நவீனமயமாக்குவதற்கும், கனடாவிற்கான, நிரந்திர குடியுரிமை மற்றும் விசா விண்ணப்பங்களில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை நீக்குவதற்கும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 3, 2022, 06:51 PM IST
  • குடியுரிமை திட்டத்தை நவீனப்படுத்த நடவடிக்கை.
  • விசா விண்ணப்ப செயலாக்கத்தை எளிதாக்க கனடா சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
  • கனடா தனது குடிவரவு முறையை மாற்றியமைக்க நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
NRI News: கனடாவில் குடியேற விரும்புவர்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி! title=

கனடா அரசாங்கம் அதன் குடியேற்றம் தொடர்பான  துறையை நவீனமயமாக்குவதற்கும், கனடாவிற்கான, நிரந்திர குடியுரிமை மற்றும் விசா விண்ணப்பங்களில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை நீக்குவதற்கும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. கனடாவின் குடியேற்ற துறையை நவீனமயமாக்குவதற்கும் டிஜிட்டல் மயமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 22 வரை, சும்மார் 3,00,000 பேருக்கு கனடாவிற்குகான நிரந்திர குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 431,000 நிரந்தர குடியுரிமை தர வேண்டும்  என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விசா விண்ணப்ப செயலாக்கத்தை எளிதாக்க கனடா சில குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் முயற்சியில், ஏற்கனவே கனடாவில் இருக்கும் நிரந்தர மற்றும் தற்காலிக வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு சில செயல்முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
வரவிருக்கும் வாரங்களில் இந்த செயல்முறையை எளிதாக்குவது சுமார் 180,000  பேர்கள், மருத்துவ பரிசோதனை செயல்முறையில் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த உதவும். அவர்களின் விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும்" என்று கனடா நாட்டின் அகதிகள் குடிவரவு  மற்றும் குடியுரிமை  (IRCC) ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | கனடா மாணவர் விசா குறித்து பலரும் அறிந்திராத ‘ஒரு’ தகவல்!

தொற்றுநோய்களின் போது  பிரிந்திருக்கும் குடும்பங்களை இணைக்கும் வகையில், கனடாவில் இருக்கும் உறவினர்களுடன் இணைய விரும்பி, விசாவிற்காக தாக்கல் செய்துள்ள விண்ணப்பங்களை விரைவாகச் செயல்படுத்த, IRCC ஸ்பான்சர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுடன் தொலைபேசி மற்றும் வீடியோ நேர்காணல்களை நடத்தத் தொடங்கியது. 2021 ஆம் ஆண்டில்   மனைவிகள், உறவினர்கள் மற்றும் குழந்தைகளை என 69,000 பேருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. 

குடியுரிமை திட்டத்தை நவீனப்படுத்தும் முயற்சியாக, 2021 ஆகஸ்ட் மாதத்தில், ஐஆர்சிசி, சில குடியுரிமை விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க அனுமதிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க |  NRI News: கனடா நாட்டின் திறமைக்கான ஆதாரமாக மாறி வரும் இந்தியா!

மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் முன்னுரிமை விசா: இங்கிலாந்து தூதரகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News