ஆப்கான் பெண் குழந்தைகளுக்கு நல்ல செய்தி: மீண்டும் திறக்கும் பள்ளிகள்
7 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் ஃபிரோஸ்கோவில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஃபிரோஸ்கோஹ் கவுன்சிலின் முயற்சியால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆக்கிரமிப்புக்குப் பிறகு, பெண்கள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு இங்குள்ள பெண்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல முடியும் என தற்போது தெரிய வருகிறது.
ஆப்கானிஸ்தானின் (Afghanistan) கோர் மாகாணத்தில் பெண்கள் பள்ளிகளைத் திறக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் கீழ் 7 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் ஃபிரோஸ்கோவில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஃபிரோஸ்கோஹ் கவுன்சிலின் முயற்சியால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
மாணவிகளுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன
ஃபிரோஸ்கோஹ் கவுன்சில் கோர் மாகாணத்தின் கல்வி அதிகாரிகளிடம் பெண்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தப்பட்டது. ஃபிரோஸ்கோஹ் கவுன்சில் தலைவர் சுல்தான் அகமது கூறுகையில், 'கோரின் அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்’ என்றார்.
தாலிபான்கள் பள்ளிக்கு செல்ல அனுமதி அளித்தனர்
கோர் மாகாணத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிவில் உரிமை ஆர்வலர் ஹபீப் வஹ்தத், "பெண்களுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார். பெண்கள் கல்வியை பறிகொடுத்தால், அடுத்த தலைமுறை சமுதாயத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது என்றார் அவர்
ALSO READ:ஆப்கானிஸ்தானில் தொடரும் அவலம்: அடுத்த கட்டளையை வெளியிட்டது தாலிபான்
தாலிபான்கள் பல்வேறு ஆணைகளை வெளியிட்டு வருகின்றனர்
மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராத் மற்றும் கோர் மாகாணங்களில், பெண்கள் இடைநிலைக் கல்விக்காக பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 15, 2021 அன்று தாலிபான்கள் (Taliban) ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். அதன் பிறகு ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இது மட்டுமின்றி, தாலிபான்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான ஆணைகளை வெளியிட்டு வருகின்றனர்.
முன்னதாக 10 அக்டோபர் 2021 அன்று, குண்டுஸ், பால்க் மற்றும் சார்-இ-புல் மாகாணங்களில் மாணவிகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இது குறித்து தகவல் அளித்த மாகாண கல்வித் துறைத் தலைவர் ஜலீல் சையத் கிலி, பெண்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவிகள் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளதாக கூறினார்.
ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிலைமை
தற்போது ஆப்கானிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வங்கி சொத்துக்களையும் விடுவிக்குமாறு ஆப்கானிஸ்தான் அமெரிக்காவை (America) வலியுறுத்தியதற்கு இதுவே காரணம். அதுமட்டுமின்றி இங்கு பட்டினிப் பிரச்னையும் அதிகரித்து வருகிறது.
ALSO READ: ரஷ்ய அதிபரை புகழும் தாலிபான்கள்; காரணம் என்ன!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR