இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த ஜூலை மாதம்  9ஆம் தேதி தீவிரமடைந்த நிலையில் அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | NRI Remittances: கேரளத்தை பின்னுக்குத் தள்ளும் வட மாநிலங்கள், விவரம் இதோ


இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை தலைக்கு மேல் போனதை அடுத்து ஜூலை 13ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பியோடினார். இலங்கையில் இருந்து மாலத்தீவு சென்ற கோத்தபயா பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து சென்றார்.



இந்நிலையில், சுமார் 2 மாதங்கள் கழித்து கோத்தபயா இன்று இலங்கை திரும்பியுள்ளார். தாய்லாந்தில் இருந்து இன்று அதிகாலை இலங்கையின் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திற்கு கோத்தபயா ராஜபக்சே வந்தடைந்தார். இலங்கை வந்த கோத்தபயாவை ஆளுங்கட்சி எம்.பி.க்கள், மந்திரிகள் விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றனர்.


அவர் தற்போது கொழும்புவின் விஜிர்மா மாவதா பங்களாவில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | இலங்கை: காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க 2000 நாட்களை தாண்டி தொடரும் போராட்டம்


இதற்கிடையே, கோத்தபய தனது பழைய வீட்டை பார்க்க வருவார் என்று கருதுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு கொடுக்க ராணுவம் மற்றும் போலீஸ் கமாண்டர்கள் அடங்கிய தனி பிரிவை அமைத்திருப்பதாக இலங்கை அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ராஜபக்சே பாதுகாப்புடன் நாடு திரும்ப ரணில் விக்ரமசிங்கே அனுமதித்திருப்பதன் மூலம் ராஜபக்சே குடும்பத்தினரை பாதுகாப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.


மேலும் படிக்க | இந்திய மாணவர்களுக்கு விரைவில் விசா வழங்க நடவடிக்கை: கனடா அமைச்சர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata