நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் முதல் அரபு படத்தால் முஸ்லிம் நாடுகளில் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக எகிப்தில் இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படம் குடும்ப அமைப்பு மற்றும் மத நம்பிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். படத்தில் உள்ள பல காட்சிகள் மூலம் அரபு நாடுகளின் கலாச்சாரத்தை குலைக்கும்  முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இப்படத்தில் ஓரினச்சேர்க்கை மற்றும் ஆபாசத்தை ஊக்குவிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால், படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தாலிய திரைப்பட ரீமேக்


இந்த படத்தின் மூலம் அரபு நாட்டு மக்களை மனரீதியாக சிதைக்க சதி நடப்பதாக பட விமர்சகர்கள் கூறுகின்றனர். படத்தின் பெயர் அஷாப் வாலா ஆஸ் (No Dear Friends) . இப்படம் இத்தாலியில் வெற்றி திரைப்படமான 'Perfect Strangers' படத்தின் அரபு ரீமேக் ஆகும். இந்தப் படம் பல சர்வதேச மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வரும் பல காட்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள், குறிப்பாக எகிப்து நாடுகள் எதிர்ப்பு  வலுத்து வருகிறது.


ALSO READ | Florida: சாலையில் ‘ஓணான்கள்’ மழை; பதற்றத்தில் மக்கள்!


சர்ச்சைக்கான காரணம்


படத்தில் ஒரு காட்சியில், ஒரு லெபனான் தந்தை தனது டீன் ஏஜ் மகளிடம்,  காதலனுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறாளா என்பதை அவள் சுதந்திரமாக தீர்மானிக்கலாம் என்று கூறுகிறார்.  மற்றொரு காட்சியில், ஒரு எகிப்திய பெண் இரவு உணவிற்கு வெளியே செல்வதற்கு முன் தனது  உள்ளாடைகளை அகற்றுகிறார். அவள் சந்திக்கச் செல்லும் நபர் அவளுடைய கணவன் அல்ல, வேறு யாரோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தின் மூலம் அரபு கலாச்சாரம் சீரழிகிறது என்கிறார்.


படத்தின் கதை 


இரவு விருந்தில் நடக்கும் ஏழு நண்பர்களின் கதைதான் இப்படம். விருந்தின் தொகுப்பாளர் அனைவரையும் ஒரு விளையாட்டில் பங்கேற்கச் சொல்கிறார், அதன் பிறகு அனைவரும் தங்கள் அழைப்புகள், உரைகள் மற்றும் குரல் செய்திகள் அனைத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் இதிலிருந்து எல்லோருடைய ரகசியங்களும் அம்பலமாக தொடங்குகின்றன. ஓரினச்சேர்க்கை உறவுகளும் வெளிப்படுகின்றன. அரபு சமுதாயத்தில் ஓரினச்சேர்க்கை கதாபாத்திரங்களை காட்டுவது அனுமதி இல்லை என்பது அது தணிக்கை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


ALSO READ | வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் கழிப்பறைக்கு ‘24 மணி’ நேர காவல்!


கலாச்சார அமைச்சகத்திற்கு எதிராக வழக்கு


கடந்த மாதம் ஜனவரி 20ஆம் தேதி வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று இரண்டு வாரங்களில் அரபு நாடுகளில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக மாறியுள்ளது. ஆனால் படம் ஹிட் ஆனவுடன் அது பற்றிய சர்ச்சையும் கிளம்பியுள்ளது. படத்தை வெளியிட அனுமதித்த எகிப்து கலாச்சார அமைச்சகம் மற்றும் தணிக்கை அலுவலகம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது, மேலும் இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என எகிப்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


நெட்ஃபளிக்ஸ் மீது தடை
பிரபல எகிப்திய நடிகை மோனா சாகியும் விமர்சனத்திற்கு ஆளானார். இந்தப் படத்தின் மூலம் ஓரினச்சேர்க்கை ஊக்குவிக்கப்படுகிறது என்கிறார்கள். இது எகிப்திய சமூகத்தின் பண்பாடு மீதான தாக்குதல் என சஎர்ச்சை வலுத்து வருகிறது. அதே நேரத்தில், எகிப்து எம்பி முஸ்தபா பெக்ரி, எகிப்தில் நெட்பிளிக்ஸைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினார், படத்திற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார். ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பேக்கரி, எகிப்து மற்றும் அரேபிய குடும்ப பண்பாடுகளை குறிவைப்பதாக வாதிட்டார்.


செக்ஸ் பற்றிய விவாதம் ஏற்கத்தக்கதல்ல


படத்தில் ஒரு காட்சியில் தந்தை தன் மகள் முன் செக்ஸ் பற்றி பேசுவது ஏற்க தக்கதல்ல என கூறிய எகிப்து எம்.பி. அதே சமயம், படத்தின் மற்றொரு காட்சி, அரபு சமூகத்தின் கலாச்சாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் திருமணத்திற்கு முந்தைய உறவைப் பற்றி விவாதிக்கிறது என்றார். நெட்ஃபிக்ஸ் எகிப்திய மற்றும் அரபு கலாச்சாரத்தை குறி வைத்தால் அதை தடை செய்ய வேண்டும். இந்தப் படத்தில் 20க்கும் மேற்பட்ட ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.


ALSO READ | Spider Bite: சிறிய சிலந்தி தானே என எண்ண வேண்டாம்; ஒரு பெண்மணியின் பகீர் அனுபவம்!


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR