நியூடெல்லி: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா! மார்ச் 1 முதல் H1B விசா விண்ணப்பங்களை பெறத் தொடங்குவதாக வெளியான தகவல்கள், நீண்ட நாட்களாக காத்திருக்கும் பலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. விசாவுக்கு விண்ணப்பித்தாலே, அது கிடைத்துவிடுமா என்று தெரியாது என்றாலும், விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு தற்போது திறக்கப்படுகிறது என்ற அறிவிப்பே பலருக்கும் நிம்மதியைக் கொடுத்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

H1B விசா ஒதுக்கீடுகள் ஆண்டுக்கு 85,000 விசாக்கள் என்ற அளவில் வரையறுக்கப்பட்டுள்ளன, அவற்றில் 20,000 விசாக்கள், அமெரிக்க நிறுவனங்களில் உயர்கல்வி பயின்ற மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 


2023-24 நிதியாண்டுக்கான H1B விசா தாக்கல் செய்யும் சீசன், அதிகாரப்பூர்வமாக மார்ச் 1 அன்று தொடங்கும், அப்போது அமெரிக்க குடியேற்ற அமைப்பானது, திறமையான வெளிநாட்டு தொழிலாளர் விசாக்களுக்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கும், இந்த நாளுக்காக பல இந்திய ஐடி நிபுணர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


மேலும் படிக்க | US விசா பெற 2 ஆண்டுகள் காத்திருக்க முடியாதா... TCN மூலம் விசா பெறலாம்


H1B விசா என்பது புலம்பெயர்ந்தோர் அல்லாத விசா ஆகும், இது அமெரிக்க நிறுவனங்களுக்கு கோட்பாட்டு அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் சிறப்புத் தொழில்களில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த அனுமதிக்கிறது.


இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் H1B விசாவையே நம்பியுள்ளன.


2023 அக்டோபர் முதல் தேதியில் இருந்து தொடங்கும் நிதியாண்டில், H-1B விசாக்களுக்கான விண்ணப்பங்களை மார்ச்  மாதத்தில் 17 நாட்கள் அதாவது மார்ச் 1 முதல் 17ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற சிறப்புத் துறைகளில் பணிபுரிபவர்கள், இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.


மேலும் படிக்க | NRI Awards: அந்நிய மண்ணில் சாதித்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு விருது


இந்த விசா பெற்ற ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிரந்தரக் குடியுரிமை அல்லது கிரீன் கார்டுக்கான பாதை திறக்கும் என்பதால், இந்த விசாவைப் பெறுவதற்கு பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  


"மார்ச் 17 க்குள் போதுமான பதிவுகளைப் பெற்றால், ரேண்டம் முறையில் பதிவுகளைத் தேர்ந்தெடுத்து, பயனர்களின் myUSCIS ஆன்லைன் கணக்குகள் மூலம் தேர்வு அறிவிப்புகளை அனுப்புவோம். போதுமான பதிவுகளைப் பெறவில்லை என்றால், ஆரம்ப பதிவு காலத்தில் சரியாகச் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பதிவுகளும் தேர்ந்தெடுக்கப்படும்" என்று USCIS கூறியது.


"மார்ச் 31 ஆம் தேதிக்குள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட உத்தேசித்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ள USCIS, எதிர் வரும் வாரங்களில் கூடுதல் தகவல்களை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளது.


H1B விசாக்களுக்கான அதிக தேவை, விசாத் திட்டத்தில் சீர்திருத்தங்களுக்கான அழைப்புகளுக்கு வழிவகுத்தது, கிடைக்கக்கூடிய விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்த வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


மேலும் படிக்க | இந்த நாட்டு மக்கள் இன்னும் 2015 இல் தான் இருக்காங்க..அது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


மீதமுள்ள 65,000 விசாக்கள் லாட்டரி முறை மூலம் வழங்கப்படுவதால் H1B விசாக்களுக்கான போட்டி கடுமையாக உள்ளது.