இந்த நாட்டு மக்கள் இன்னும் 2015 இல் தான் இருக்காங்க..அது எப்படி?

Julian Calendar: ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாட்டில், 12 மாதங்களுக்கு பதில் 13 மாதங்கள் ஆகும். இந்த நாடு உலகின் பிற நாடுகளில் இருந்து வேறுபட்டு இயங்குவதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 29, 2023, 08:54 PM IST
  • ஆப்பிரிக்க கண்டத்தில் அடிசய நாடு.
  • 12 மாதங்களுக்கு பதில் 13 மாதங்கள் ஆகும்.
  • பிற நாடுகளில் இருந்து வேறுபட்டு இயங்குகிறது.
இந்த நாட்டு மக்கள் இன்னும் 2015 இல் தான் இருக்காங்க..அது எப்படி?

கிரிகோரியன் நாள்காட்டி: கிரெகொரியின் நாட்காட்டி என்பது உலக அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டி பன்னாட்டுத் அஞ்சல் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது. இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கிமு 45-இல் உரோமைப் பேரரசர் யூலியசு சீசரால் உருவாக்கப்பட்ட யூலியன் நாட்காட்டியின் ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியசு இலிலியசு என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது 1582 பிப்ரவரி 24 இல் அப்போதைய திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.

அந்தவகையில் இப்போது நீங்கள் உலகம் முழுவதும் 12 மாதங்களில் 1 வருடம் என்று நினைத்திருந்தால் அது தவறு. ஆம், ஒரு வருடம் என்பது 12 மாதங்கள் அல்ல, 13 மாதங்கள் என்று இந்த ஒரு நாடு இருக்கிறது. உலகெங்கிலும் 2023 ஆண்டு நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த நாட்டில் 2015 இன்னும் தொடர்வதற்கு இப்போது தான் தொடங்கியுள்ளது. இந்த நாடு எத்தியோப்பியா ஆகும். 13 மாதங்களுக்குப் பிறகு இங்கு புத்தாண்டு கொண்டாட்டம் நடைப்பெறும். இப்போது இதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | ஜூஸ் கேட்ட கஸ்டமருக்கு... சப்ளையர் என்ன கொடுத்தார் தெரியுமா? - மருத்துவமனையில் 7 பேர்

எத்தியோப்பியாவின் நாட்காட்டி உலகத்திலிருந்து வேறுபட்டது
உலக நாடுகள் கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட நிலையில், ஜூலியஸ் சீசர் உருவாக்கிய ஜூலியன் நாட்காட்டியை இந்த நாடு பின்பற்றுவதே இதற்குக் காரணம் ஆகும்.

உலகம் முழுவதற்கும் ஒரே மாதிரியான நாட்காட்டி பின்பற்று வருகிறது
கிரிகோரியன் நாட்காட்டி 1582 ஆம் ஆண்டு போப் கிரிகோரி 13 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஜூலியன் நாட்காட்டியை மேம்படுத்தி இந்த நாட்காட்டியை உருவாக்கி ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக அறிவித்தார். இந்த காலண்டர் உலகம் முழுவதும் பொருந்தும். ஆனால் எத்தியோப்பியா அதை ஏற்க மறுத்து பழைய ஜூலியன் நாட்காட்டியையே பின்பற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க | உக்ரைனுக்கு போர் டாங்கிகளைக் கொடுக்கும் நாடுகள்! அமெரிக்காவை குறைசொல்லும் வடகொரியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News