Alert Bubonic Plague: இதுவரை, உலகில் சுமார் 6 லட்சம் இறப்புகள் கொரோனா வைரஸால் (Coronavirus) ஏற்பட்டுள்ளன. பல நாடுகள் அதன் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. பல நாடுகள் சோதனைக் கட்டத்தில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி குறித்து நல்ல முடிவை தந்துள்ளனர். இருப்பினும், தடுப்பூசி Coronavirus Vaccine) பயன்பாட்டுக்கு எப்பொழுது வரும், அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்வது கடினம். ஆனால், கொரோனா வைரஸ் முடிவதற்கு முன்பு, உலகில் மற்றொரு புதிய தொற்றுநோய் பரவி வருகிறது. அதன் பெயர் புபோனிக் பிளேக் (Bubonic Plague)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புபோனிக் பிளேக் காரணமாக ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது. மங்கோலியாவில், 15 வயது சிறுவன் புபோனிக் பிளேக்கால் இறந்துள்ளார். தென்மேற்கு சீனாவின் கோபி-அல்தாய் என்ற தொலைதூர மாகாணத்தில் வசிக்கும் ஒரு குழந்தை, மர்மோட்டை (அணில் இனங்களின் மிருகம்) வேட்டையாடி சாப்பிட்டது. அதன் பிறகு அவர் ஒரு அரிய பாக்டீரியா நோயால் பாதிக்கப்பட்டார். 


சுகாதார அமைச்சின் (Health Ministry) செய்தித் தொடர்பாளர் நாரங்கரேல் டோராஜ் கூறுகையில், இறக்கும் குழந்தையுடன் தொடர்பு 


ALSO READ | முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றாவிட்டால் COVID-19 உச்சகட்ட அழிவை ஏற்படுத்தும்: WHO


கொண்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நபர்களுக்கு தேவையான நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


எந்த மர்மோட்டையும் வேட்டையாடவும் சாப்பிடவும் வேண்டாம் என்று மங்கோலிய அரசாங்கம் (Mongolian Government) மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவாவின் கூற்றுப்படி, சீனாவின் வடக்கு பிராந்தியத்தில், COVID-19 முன்னேற்றம் காணப்படுகிறது, மற்றொன்று புபோனிக் பிளேக்கால் பாதிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | புகைபிடிப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் இருப்பதாக WHO எச்சரிக்கை


அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மங்கோலியாவில் வேட்டையாடுவதையும் சாப்பிடுவதையும் தவிர்க்க மங்கோலியாவின் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு ஆண்டும் மங்கோலியாவில் ஒரு தொற்றுநோயால் ஒருவர் இறந்துவிடுகிறார். அரசாங்க விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம், மக்கள் இறைச்சி சாப்பிடுவதையோ அல்லது விலங்குடன் தொடர்பு கொள்வதையோ தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை.


ALSO READ | COVID-19 தொற்றுக்கு தாய்ப்பால் கொடுப்பது பயனுள்ளது என ஆய்வில் தகவல்!


புபோனிக் பிளேக் (Bubonic Plague) சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்த நோய் 24 மணி நேரத்திற்குள் ஒரு மனிதனைக் கொல்லும் என்று சுகாதார அமைப்பு கூறுகிறது. அமெரிக்காவின் கொலராடோவின் மோரிசன் நகரில் ஒரு அணில் புபோனிக் பிளேக் கண்டுபிடிக்கப்பட்டது.