பெய்ஜிங்: அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு பயணம் மேற்கொண்டால், சீனா உறுதியான மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது. அதுபர் பதவிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் பெலோசி, தைவான் செல்ல உள்ளார். நான்சி பெலோசி, முதலில் ஏப்ரல் மாதத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு COVID-19 தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து, பயணத்தை  ஒத்திவைக்க வேண்டியிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெலோசியின் வருகை, "சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கடுமையாகக் குறைக்கும், சீனா-அமெரிக்க உறவுகளின் அடித்தளத்தை கடுமையாக பாதிக்கும் என்பதோடு தைவான் சுதந்திரப் படைகளுக்கு தவறான சமிக்ஞையை அனுப்பும்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியாங் தெரிவித்தார்.  தேவைப்பட்டால், தைவானை சீனா தனது நாட்டுடன்  இணைக்கும் என தைவான் வான்வெளிக்கு அருகே போர் விமானங்களை பறக்கவிட்டு அச்சுறுத்தியுள்ளது சீனா. 


மேலும் படிக்க | அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு; சிகாகோவில் 5 பேர் பலி; 16 பேர் காயம்


"சீனா தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உறுதியான மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுக்கும். அதற்கு அமெரிக்கா எங்கள் நிர்பந்திப்பது போல் செயல்படக் கூடாது" என்று ஜாவோ கூறினார். சமீப நாட்களில், தைவானுக்கு அமெரிக்க ஆயுத விற்பனை செய்வது தொடர்பாக சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவான் ராணுவ ரீதியாக வலுப்பெறுவதை விரும்பாத சீனா, சுமார் $108 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி வருகிறது. 


"சீன மக்கள் விடுதலை இராணுவம் வெளி சக்திகள் மற்றும் தைவான் சுதந்திரத்திற்கான பிரிவினைவாத சதிகளின் எந்தவொரு தலையீட்டையும் உறுதியாக முறியடிக்கும்" என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதளத்தில் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.


தைவானுக்கு எதிரான சீனாவின் மிகத் தீவிரமான அச்சுறுத்தல் நடவடிக்கையை 1995-96 ஆம் ஆண்டில் மேற்கொண்ட சீனா இராணுவப் பயிற்சிகளை நடத்தியது. அப்போதைய அதிபர் லீ டெங்-ஹுய் அமெரிக்காவிற்கு பயணம் செய்ததற்கு பதிலளிக்கும் வகையில் தைவானின் வடக்கு மற்றும் தெற்கே உள்ள நீர்நிலைகளில் ஏவுகணைகளை வீசியது.


மேலும் படிக்க | துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ