Hindu Temple Vandalization: லெய்செஸ்டரில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளுக்கு பிறகு, இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று இந்து மற்றும் முஸ்லிம் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, இரு சமூகங்களின் தலைவர்களும் அமைதிக்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு உணர்ச்சிவசப்பட்டு இந்த வெறுப்பு சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அழைப்பு விடுத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயன்று, இரு சமூகங்களின் தலைவர்களும் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். ஜேம் மசூதி மற்றும் இஸ்கான் இந்து கோவிலின் தலைவர்கள் இரு மதங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நட்பின் பிணைப்பைச் சுட்டிக்காட்டி, "வெறுப்பைத் தூண்டுபவர்கள்" நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



ஒரு மசூதிக்கு வெளியே கூட்டறிக்கையைப் படித்த லெய்செஸ்டரின் இஸ்கான் கோவிலின் தலைவர் பிரத்யும்ன தாஸ், “இது இந்து மற்றும் முஸ்லீம் சமூகத்தின் கூட்டு அறிக்கை ஆகும். லெய்செஸ்டர் நகரில் நாங்கள் இந்துக்களாகவும் முஸ்லிம்களாகவும் மட்டுமல்ல, சகோதர சகோதரிகளாகவும், ஒரே குடும்பமாக உங்கள் முன் நிற்கிறோம். இந்த அற்புதமான நகரத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எங்கள் இரு சமூகத்தினரும் இணக்கமாக வாழ்ந்து வருகிறோம். நாம் ஒன்றாக இந்த நகரத்திற்கு வந்தோம், இங்குள்ள சவால்களை ஒன்றுபோலவே எதிர்கொண்டோம். நம் மீதான மரியாதையை இழக்கும் செயல்களை யாரும் செய்ய வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.


மேலும் படிக்க | இங்கிலாந்தில் இந்து கோயில் மீது தாக்குதல் - இந்திய தூதரகம் கண்டனம்


வார இறுதியில் 25 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் மற்றும் 47 பேர் கைது செய்யப்பட்டதற்கு வழிவகுத்த பதற்றம் மற்றும் வன்முறை வெடித்ததைக் கண்டு தாங்கள் வருத்தமும் மனவேதனையும் அடைந்துள்ளதாக அவர் கூறினார். ஒன்றாக இந்த நகரத்திற்கு வந்த நாம், இனவெறி வெறுப்பாளர்களை ஒன்றாக எதிர்த்துப் போராடி, இந்த நகரத்தை பன்முகத்தன்மை மற்றும் சமூக ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக மாற்றுவதற்கு கூட்டாக பணிபுரிந்தோம் என்று இஸ்கான் தரப்பில் கூறப்பட்டது.


“அதனால்தான் பதற்றம் மற்றும் வன்முறை வெடிப்பதைக் கண்டு நாங்கள் வருத்தமும் மனவேதனையும் அடைகிறோம். அப்பாவி தனிநபர்கள் மீதான உடல்ரீதியான தாக்குதல்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது ஒரு கண்ணியமான சமூகத்தின் செயல் அல்ல” என்று அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக, சமூகத் தலைவர்கள் ஊருக்கு வரும் வெளியாட்கள் பதட்டங்களைத் தூண்டுவதாக தெரிவித்திருந்தனர்.


மேலும் படிக்க | புனித ஜார்ஜ் தேவாலயத்தில் கணவருக்கு அருகில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அடக்கம்


ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்ததை அடுத்து ஆகஸ்ட் 28ஆம் தேதி வன்முறை வெடித்தது. சமூக ஊடகங்களில் வைரலான பல கிளிப்புகள் கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு வன்முறை வெடிப்பதைக் காட்டுகின்றன. அதன்பிறகு, இந்து மதச் சின்னங்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள் மற்றும் நாசவேலை சம்பவங்கள் அரங்கேறியதாக செய்திகள் வந்துள்ளன.


திங்களன்று இங்கிலாந்து இந்திய ஹை கமிஷன் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்து அரசைக் கேட்டுக் கொண்டது.


இந்து கோயில் தாக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை தெரிவித்த லண்டனில் உள்ள இந்திய தூதரகம், "இந்த சம்பவம் குறித்து, நாங்கள் இங்கிலாந்து அதிகாரிகளிடம் உரிய முறையில் எடுத்துக் கூறியுள்ளோம். தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என கோரியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளோம்" என தெரிவித்தது.


மேலும் படிக்க | மகாராணி எலிசபெத் இறுதிசடங்கு : சாதாரண உடையில் இளவரசர் ஹாரி - ஏன் தெரியுமா?


மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளிவட்ட புகைப்படம்! நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவரின் சாதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ