வங்கதேசத்தில் இடிக்கப்பட்ட கோவில், அமைதி காக்கும் அரசு!
வங்கதேசத்தில் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு இந்து கோவில், அதே பகுதியை சேர்ந்த இரு குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
டாக்கா: வங்கதேசத்தில் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு இந்து கோவில், அதே பகுதியை சேர்ந்த இரு குழுவினரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இந்து மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் சித்த ரஞ்சன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் சிவன் கோவில் ஒன்றை கட்டி நிர்வாகம் செய்து வந்தார்.
டாக்க மாகாணம் பாட்ரா கிராமத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில், இந்து மக்கள் கூடி மதகலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டி, அதே கிராமத்தை சேர்ந்த சிலர் சித்த ரஞ்சனுக்கு சொந்தமான கோவில் நிலப் பகுதியினை கையகப்படுத்த முற்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது 8 பேர் கொண்ட மர்ம குழுவினர் இக்கோவிலை சேதப்படுத்தி, இடத்தை கையக படுத்தியுள்ளனர். மேலும் ரஞ்சன், மற்றும் அவரது குடும்பத்தாரையும் இந்த கும்பல் தாக்கியுள்ளது.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இந்த தேவாலயத்தில் மக்கள் மத நடவடிக்கைகளை நடத்தி வருவருகின்றனர் என்பதால், அப்பகுதி மக்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நகர்பூர் காவல்துறை ஆணையர் ஆலம் சந்த் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார், எனினும் இதுவை இச்சம்பவம் தொடர்பாக ஒருவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்ககது.
வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக இருக்கும் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது புதிதல்ல., இந்நாட்டில் பின்பற்றப்படும் 'சொத்துரிமைச் சட்டம்' காரணமாக தொடர்ந்து இந்துக்கள் பாதிக்கப்பட்டு தான் வருகின்றனர்.
கடந்த 1971-ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாவதற்கு முன்னர் அங்கு, 'எதிரிகள் சொத்துச் சட்டம்' என்று அழைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம் நடைமுறையில் இருந்தது. இது பின்னர் 'சொத்துரிமைச் சட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, நாட்டின் எதிரியாகக் கருதப்படும் நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் அறக்கட்டளைகளின் சொத்தை அரசு எடுத்துக்கொள்ள முடியும். வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக இருந்த இந்துக்கள் இந்தச் சட்டத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள்.
இந்த சட்டத்தினால் சில இந்துக்கள் தங்களது சொத்துகளை மீட்டுக்கொண்டாலும், பலர் இச்சட்டத்தால் இன்றளவும் பாதிக்கப்பட்டு தான் வருகின்றனர்.