இணையம் பல்வேறு வகையில் நமது தகவல்களை அள்ளிக் கொடுக்கும் களஞ்சியமாக இருந்தாலும், அதனிடம் அடிமையாகி, அது இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு சென்று வெறித்தனமான செயலுக்கு சிலர் தூண்டப்படுகின்றனர். அதிலும் சிறுவர்கள் சிலரும் அடிமையாகி, அது கிடைக்காமல் போனால், கொலை, கொள்ளை என இறங்கி விடும் சம்பவங்கள் அதிர்ச்சிகளை கொடுப்பதாக உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்பெயினில் இது போன்ற சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் ஒருவர் Wi-Fi இணைப்பை துண்டித்ததால், ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன் ஒருவன் தனது தாய், தந்தை மற்றும் தம்பியை சுட்டுக் கொன்றான். இது மட்டுமின்றி, மூன்று நாட்களாக அவர்களது சடலங்களுடன் வீட்டிற்குள் இருந்துள்ளான்.


குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்பெயினின் எல்ஷ் நகரில் இந்த மூன்று கொலையை செய்த மைனர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். 


மேலும் படிக்க | முதல் லாட்டரி சீட்டிலேயே ₹35 கோடி; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பெண்மணி!


சிறுவனின் தாய் பள்ளியில் மோசமான மதிப்பெண்கள் எடுத்ததற்காகவும் வீட்டு வேலைகளில் உதவாததற்காகவும், சிறுவனை கண்டித்ததோடு, எப்போதும் கணிணி மொபைல் என மூழ்கி போகும் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் வைஃபை இணைப்பை துண்டித்துள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது தாய், தந்தை மற்றும் 10 வயது சகோதரனை துப்பாக்கியால் சுட்டு கொன்றான். அதோடு, மூன்று நாட்கள் சடலங்களுடன் வீட்டில் அமர்ந்திருந்த அவன், நடந்த சம்பவத்தை பின்னர் உறவினர்களிடம் தெரிவித்தான். பின்னர் காவல் நிலையத்தில் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டான். தற்போது அவன் காவலில் உள்ளார்.


சிறுவன் செய்துள்ள கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.


மேலும் படிக்க | பிரேசிலில் நடந்த கொடூரம்; மனைவியை கொன்று கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட நபர்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR