பிரேசிலில் நடந்த கொடூரம்; மனைவியை கொன்று கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட நபர்!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மௌரோ சம்பீட்ரி, என்பவர், தனது காதலுக்கு தடையாக இருந்த மனைவியை கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 13, 2022, 11:51 AM IST
  • மனைவியைக் கொன்று துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்டார்
  • வீட்டிற்கு அருகில் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன
  • ஐந்து வருடங்களுக்குப் பிறகு பிடிபட்டார்.
பிரேசிலில் நடந்த கொடூரம்; மனைவியை கொன்று கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட நபர்! title=

தில்லியை உலுக்கிய தந்தூரி கொலை வழக்கு பலருக்கு நினைவில் இருக்கலாம் . தில்லியின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுஷில் சர்மா, தனது மனைவி நைனா சாஹ்னியைக் கொன்றுவிட்டு, உணவகத்தின் தந்தூரி அடுப்பில் அவரது உடலை எரித்து விட்டார். இந்த வழக்கில் சர்மாவுக்கு 2003 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

அதே போன்ற சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மௌரோ சம்பீட்ரி, முதல் மனைவியை இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த, மனைவியை கொடூரமாக கொன்றதோடு, அவன் அவலது உடலை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டு, சமைத்தும் சாப்பிட்டிருக்கிறான். எந்த ஆதாரமும் கிடைக்க கூடாது என்பதற்காக, தந்தூரி அடுப்பில் உடலை சமைத்து சாப்பிட்டிருக்கிறான்.

மேலும் படிக்க | விண்வெளியில் காந்தப்புயல்; SpaceX அனுப்பிய 40 செயற்கோள்கள் சேதம்..!!

 குற்றம் சாட்டப்பட்ட மௌரோ சம்பீட்ரி வேறு ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அவலை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தா நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தடையாக இருந்த மனைவியை கொடூரமாக கொன்று, சாப்பிட்டு, மீண்டும் திருமணம் செய்து கொண்டார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட நிலையில், போலீசார் ஊடகளிடம் வழக்கு விபரங்களை தெரிவித்தனர். 

குற்றவாளி மௌரோ சம்பீட்ரி (Mauro Sampietri, 59)  அவரது மனைவி Claudete Sampietri உடன் நீண்ட காலம் வழ்ந்த போதிலும், இடையில் ஏற்பட்ட காதலுக்கு அவர் தடையாக இருந்ததால் அவரைக் கொன்றார். இருப்பினும், மனைவி காணாமல் போனதை அடுத்து, போலீஸார் வீட்டில் நடத்திய சோதனை மற்றும் விசாரனையில், வீட்டின் அருகே அவரது உடலின் சில எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன, அதன் பிறகு மேலும் விசாரனை செய்து போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.

இந்த கொடூர கொலைச் செயலானது ஜனவரி 2017 ஆண்டு மௌரோவால் நடத்தப்பட்டது.  இந்த வழக்கில் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது  திருமணம் செய்து கொள்ள சிறையில் இருந்து தப்பித்து சென்று, மீண்டும் திருமணம் செய்து கொண்டார். சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது மீண்டும் போலீஸில் படிப்பட்டார். 

மேலும் படிக்க | துருக்கியில் 'நரகத்தின் நுழைவாயில்' என அழைக்கப்படும் கிரேக்க கோயில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News