இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பகையின் எதிரொலி ஒரே இரவில் அதிகரித்ததில், காசாவில் 35 பாலஸ்தீனியர்களும், இஸ்ரேலில் ஐந்து பேரும் உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல ஆண்டுகளாக தொடரும் பகையின் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் தொடர் சண்டைகளில் நேற்று இரவு வான்வழிப் தாக்குதல்களில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது.
 
இஸ்லாமிய குழு மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிக் குழுக்கள், டெல் அவிவ் (Tel Aviv) மற்றும் பீர்ஷெபாவில் (Beersheba) பல ராக்கெட் தாக்குதல்களை நடத்தியதால், இஸ்ரேல் புதன்கிழமை அதிகாலை காசாவில் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.


Also Read | முன்களப் பணியாற்றும் செவிலியர்களுக்கு International Nurses Day வாழ்த்துக்கள்


காசாவில் பல மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது, மற்றொன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் பலத்த சேதமடைந்தது. உளவுத்துறை மையங்கள் மற்றும் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளிட்ட ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இது 2014 காசாவில் நடந்த போருக்குப் பின்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மிகப் பெரிய தாக்குதலாகும், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் சர்வதேச அளவில் கவலைகள் அதிகரித்துள்ளன.


"காசாவில் போர் பேரழிவு தரக்கூடியது, இதில் சாதாரண மக்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். அமைதியை மீட்டெடுக்க ஐ.நா. தீவிரமாக செயல்படுகிறது. வன்முறையை இப்போது நிறுத்துங்கள்" என்று ஐ.நா. மத்திய கிழக்கு அமைதி தூதர் டோர் வென்னஸ்லேண்ட் (UN Middle East peace envoy Tor Wennesland) டிவிட்டர் செய்தி வெளியிட்டுள்ளார்.


Also Read | LPG மானியம் தவறுதலாக கைவிட்டுப் போனதா? மீண்டும் சுலபமாக பெறலாம் 


புதன்கிழமை அதிகாலையில், கசாவில் தங்கள் வீடுகள் அதிர்ந்ததாகவும், இஸ்ரேலிய தாக்குதல்கள், தாக்கும் ராக்கெட்டுகள், இஸ்ரேலிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் என வானில் போர் மேகம் சூழ்ந்திருந்தது.
 
காசா நகரில் கட்டடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பீர்ஷெபா மற்றும் டெல் அவிவ் நோக்கி 210 ராக்கெட்டுகளை வீசியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.


இஸ்ரேலைப் பொறுத்தவரையில், அதன் வணிகத் தலைநகரான டெல் அவிவை தீவிரவாதிகள் குறிவைப்பது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் இஸ்லாமிய ஹமாஸ் குழுவுடன் மோதலில் ஒரு புதிய சவாலை முன்வைப்பதாக இருக்கிறது.


Also Read | செவிலியர்களுக்கு International Nurses Day வாழ்த்துக்கள்


புனித ரமலான் மாதத்தில் எருசலேமில் பல வாரங்களாக ஏற்பட்ட வன்முறைகள் கவலைகளை அதிகரிக்கின்றன. இஸ்லாமியர்களின் புனிதத் தலமான அல்-அக்ஸா மசூதி (Al-Aqsa Mosque) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேலிய போலீசார் மற்றும் பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களிடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன.


ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் வன்முறை வெடித்தது, அங்கு 26 வயதான பாலஸ்தீனியர் இஸ்ரேலியர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.


Also Read | Hilarious! தடுப்பூசி ஃபார்முலா தொடர்பான கெஜ்ரிவாலின் யோசனை இணையத்தில் வைரல்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR