Indonesia Earthquake : இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 46 பேர் பலி
Indonesia Earthquake : இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 46 பேர் உயரிழந்துள்ளதாகவும், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேஷியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவு கோளில் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகவும் வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. தற்போது, 46 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தலைநகர் ஜகார்தாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டாலும், சேதமா உயிரிழப்போ ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து 22 வயதான வழக்கறிஞர் மாயாதிதா வாலுயோ என்பவர் தெரிவிக்கையில்,"நான் பணியாற்றி வந்த கட்டடத்தின் தளம் கடுமையாக குழுங்கியது.
மேலும் படிக்க | 'சிக்கனமாக இருங்க மக்களே' ஆனந்த் ஸ்ரீனிவாசனாக மாறிய அமேசான் சிஇஓ...
என்னால் மிகத் தெளிவாக நிலநடுக்கத்தை உணர முடிந்தது. நான் ஒன்றுமே செய்யவில்லை, என்ன நடக்கிறது என்றும் எனக்கு தெரியவில்லை. கடந்த முறை ஏற்பட்டதை விட பலமானதாகவும், நீண்ட நேரமும் இந்த நிலநடுக்கம் நீடித்தது. தற்போது எனக்கு கொஞ்சம் சோர்வாக உள்ளது. கால்களில் சுளுக்கு ஏற்பட்டது போன்று இருக்கிறது. ஏனென்றால், 14ஆவது மாடியில் இருந்து இறங்கி வீதிக்கு ஓடிவந்தேன்" என மிக அதிர்ச்சியுடன் கூறினார்.
நிலநடுக்கத்தால் தலைநகர் ஜகார்தாவில் நூற்றுக்கணக்காணோர் வீதிகளில் திரண்டுள்ளனர். கடந்தாண்டு ஜனவரியில் ஏற்பட்டு, சுலேவேசி தீவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்காணோர் வீடுகளை இழந்து தவித்தது குறிப்பிடத்தக்கது.
பசிபிக் பெருங்கடலின் 'Ring of Fire' என்றழைக்கப்படும் பகுதியில், இந்தோனேஷியா அமைந்துள்ளது. அதாவது அப்பகுதிகளில், செயலில் உள்ள எரிமலைகள் அதிகமிருக்கும். அதுமட்டுமின்றி அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும் வழக்கம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ