சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பல நகரங்களில் கடுமையான லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு நகரம் ஜெங்ஜோ (Zhengzhou) ஆகும். இந்த நகரத்தில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த தொழிற்சாலையில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இப்போது தங்கள் வீடுகளை நோக்கி தப்பி ஓடுகிறார்கள். சில படங்களில் சில பணியாளர்கள் வேலியை தாண்டி பாய்ந்து ஓடுவதை பார்க்க முடிகிறது. தொழிலாளர்கள் எந்த வகையிலும் லாக்டவுனில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. எனவே எப்படியாவது தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என அவர்கள் பதற்றத்துடன் வெளியேறி வருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெங்ஜோவில் மிகப்பெரிய ஆப்பிள் அசெம்பிளி யூனிட் உள்ளது. இந்த பிரிவில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். சீனாவில் கொரோனா அச்சம் காரணமாக ஊழியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கானுக்கு சொந்தமான இந்த ஆலையில் இருந்து தப்பிக்க ஊழியர்கள் வேலிகளை தாண்டுவதைக் காட்டும் வீடியோக்களும் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் ஊழியர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.


மேலும் படிக்க | NRI: உகாண்டாவில் பயங்கரம்: இந்திய இளைஞரை சுட்டுக் கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள் 


சுமார் 3 லட்சம் ஊழியர்கள் ஃபாக்ஸ்கானில் பணிபுரிகின்றனர். உலகில் விற்பனையாகும் ஐபோன்களில் பாதி இந்த ஆலையில்தான் தயாரிக்கப்படுகிறது. சீனாவில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளுக்கு கால்நடையாக புறப்பட்டனர். இரவும் பகலும் நடந்து சென்று எந்த நிலையிலும் தங்கள் வீடுகளை அடைய மக்கள் கால்நடையாக செல்லும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.


நெடுஞ்சாலையோரம் வசிக்கும் மக்கள் ஃபாக்ஸ்கான் ஊழியர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை வழங்க இலவச விநியோக நிலையங்களை அமைத்துள்ளனர். அக்டோபர் 29 ஆம் தேதி நிலவரப்படி, ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஜெங்ஜோ (Zhengzhou) நகரத்தில் 167 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 'எங்கள் நிலத்தை போலீஸ் அதிகாரியே அபகரித்துள்ளார்’: குற்றம் சாட்டும் NRI தம்பதி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ