செமி கண்டக்டர் சிப்களை தயாரிக்க Foxconn - வேதாந்தா குழுமம் இடையில் ஒப்பந்தம்

இந்தியாவில் டிஸ்ப்ளே மற்றும் செமிகண்டக்டர் சிப்களை தயாரிப்பதற்காக $15 பில்லியன் முதலீடு செய்ய விருப்பம் உள்ளதாக ஜனவரியில் வேதாந்தா குழுமம் கூறியிருந்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 15, 2022, 04:54 PM IST
செமி கண்டக்டர் சிப்களை தயாரிக்க Foxconn - வேதாந்தா குழுமம் இடையில் ஒப்பந்தம் title=

மத்திய அரசின் தொழில் துறையை ஊக்குவிக்கும் நோக்கிலான செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் திட்டத்தின் கீழ், அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா மற்றும் Hon Hai டெக்னாலஜி குழுமம் (Foxconn) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் செமி கண்டக்டர் சிப்களை தயாரிக்க உள்ளன. 

முன்னதாக, 2021 டிசம்பரில், அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ. 76,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டு, செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே போர்டு உற்பத்திக்கான PLI திட்டத்தை மத்திய அரசு அனுமதித்தது. உலக அளவிலான செமி கண்டகடர் சிப் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்தி வசதிகளுக்கான பெரிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ISM) சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆலை அமைக்கும் இடத்தை இறுதி செய்ய சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நிறுவன அதிகாரிகள் முதலீட்டின் அளவு, திட்டத்தின் இடம் மற்றும் மதிப்பிடப்பட்ட உற்பத்தி திறன் பற்றி eதுவும் கூறவில்லை

வேதாந்தா குழுமம், வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் டிஸ்ப்ளே மற்றும் செமிகண்டக்டர் சில்லுகளை தயாரிப்பதற்காக $15 பில்லியன் முதலீடு செய்யும் நோக்கத்தை ஜனவரியில் பகிர்ந்து கொண்டது. வேதாந்தா குழுமம், வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் டிஸ்ப்ளே மற்றும் செமிகண்டக்டர் சிப்களை தயாரிப்பதற்காக 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய விருப்பம் உள்ளதாக ஜனவரியில் கூறியது. 

Hon Hai டெக்னாலஜி குழுமம் என்பது Apple நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் பிற பிரபலமான தயாரிப்புகளை தயாரிப்பதில் புகழ்பெற்ற பல பில்லியன் டாலர் மதிப்பிலான தைவானிய மின்னணு ஒப்பந்த உற்பத்தியாளர் ஆகும். டிசம்பரில், இந்நிறுவனம் இந்தியாவின் துணை நிறுவனத்தில் $350 மில்லியன் மதிப்பிலான பங்குகளை வாங்கியது. இந்தியாவில் அதன் நீண்டகால வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்த புதிய முதலீடு இருக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ABG Shipyard மோசடி: திகைக்க வைக்கும் மோசடியில் சிக்கிய வங்கிகள் இவைதான் 

Hon Hai, அதன் துணை நிறுவனமான Foxconn மற்றும் இதர துணை நிறுவனங்கள், மின்னணு உற்பத்தி சேவைகள் (EMS) துறையில் 40 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டு உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

திங்களன்று இரு நிறுவனங்களுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வேதாந்தா நிறுவனத்திடம் பெரும்பாலான பங்குகளை கொண்டிருக்கும். Foxconn அதை விட குறைவான அளவு பங்குகளை வைத்திருக்கும். வேதாந்தாவின் அகர்வால் கூட்டு நிறுவனத் தலைவராக இருப்பார்.

கடந்த டிசம்பரில், ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் தொழிலாளா்கள் தங்கியுள்ள உணவு விடுதியில் தரமற்ற உணவு வழங்கிய நபா்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி, சுமார் 2,000 ஊழியர்கள் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை 12 மணி நேரத்திற்கும் மேலாக மறித்து, போராட்டம் நடத்தினர். பின்னர் ஆலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நிலைமையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்த பின்னர் ஜனவரி மத்தியில் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

மேலும் படிக்க | கிரிப்டோகரன்சி Ponzi திட்டங்களை விட மோசடியானது: RBI துணை கவர்னர் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News