அமெரிக்காவின் கரோலினா புயல் செய்தியை நேரலையாய் வாசித்த போது ஆடிய செய்தியாளரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் கரோலினாவை ஃபிளாரன்ஸ் புயல் தாக்கிய போது, வானிலை தொலைக்காட்சியில் நேரலையாக செய்தி வாசித்த மைக் செய்டல் என்ற செய்தியாளர் புயலால் அசைக்கப்படுவது போல உடலை அசைத்தபடி வாசித்தார்.


ஆனால் அவருக்குப் பின்னால் இரண்டு பேர் இயல்பாக நடந்து சென்றதால் அது நாடகம் என அம்பலமானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ஒருகோடியே 36 லட்சம் பேர் அதனைக் கண்டனர். சமூக ஊடகங்களில் இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.


ஆனால் வானிலை தொலைக்காட்சி நிர்வாகம் இந்த காட்சியில் தவறில்லை என விளக்கம் அளித்தது. வானிலை செய்தி வாசித்தவர் ஈரமான புல்தரையில் நின்றிருந்ததால் அவரால் நிலை கொள்ள முடியவில்லை என்றும் அந்த வானிலை தொலைக்காட்சி ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து கூறியது.