ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிக்காகோவின் தெருக்களில் பிச்சை எடுக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து இவருக்கு உடனடியாக இந்திய அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர். யார் இவர்..?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐதராபாத்தை சேர்ந்த பெண்:


ஐதராபாத்தை சேர்ந்தவர், சையதா லுலு மின்ஹாஜ் சைதி. இவர், மேற்படிப்பிற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு வந்துள்ளார். அங்குள்ள ட்ரைன் பல்கலைக்கழகத்தில் இவர் சேர்ந்து பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் இவர் சிக்காகோ நகரின் தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலையிலும் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளது ஒரு வீடியோவால் தெரியவந்தது. இவரது பொருட்கள் திருடப்பட்டதை தொடர்ந்து, இவருக்கு இந்த நிலை நேர்ந்துள்ளது. 


மேலும் படிக்க | அடுத்த ஆண்டு முதல் புது கேஸ் கனெக்‌ஷன் கிடையாது! அதிர்ச்சியில் மக்கள்! காரணம் என்ன?


பாதிக்கப்பட்டவரின் தாயார் வேண்டுகோள்:


சிக்காகோவில் மிகவும் கொடுமையான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள ஐதராபாத் பெண்ணிற்கு இந்திய அரசாங்கம் கண்டிப்பாக உதவ வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சையதா வஹாஜ் ஃபாத்திமா, தன் மகள் குறித்து வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தன் மகள் பத்திரமாக இந்தியாவிற்கு திரும்பி வர வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 


வைரலான வீடியோ:


சிக்காகோவில் பணம் இல்லாமல் சிக்கித்தவிக்கும் சையதா லுலு மினாஜ் குறித்து வெளியான வீடியோவில் அவரது சான்றிதழ்கள் உள்பட சில ஆவணங்கள் காண்பிக்கப்பட்டிருந்தன. இதை, பாரத் ராஸ்த்ரா சாமிதி கட்சியின் தலைவர் காலீக்குயர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சிக்காகோவில் படிக்க சென்ற இந்த பெண் குறித்த விவரங்களை தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்த அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இவர்களுக்கு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த ட்வீட்டில் அவ்வர், சிக்காகோவில் இருக்கும் இந்திய தூதரகத்தின் கணக்குகலையும் டேக் செய்திருந்தார். 


2 மாதமாக இந்த நிலை..?


தற்போது சிக்காகோவில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் சையதா லுலு மின்ஹாஜ் சைதி, 2021ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக ட்ரைன் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். அங்கு தங்கி படித்துக்கொண்டிருந்த போது தனது குடும்பத்தினருடன் இவர் அடிக்கடி உரையாடியதாக கூறப்படுகிறது. சுமார் இரண்டு மாதங்கலுக்கு முன்பிருந்துதான் இவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதாகவும் தற்போதுதான் இவர் சிக்காகோ நகரில் யாசகம் எடுத்து வரும் செய்தி தெரிய வந்ததாகவும் அவரது தாயார் தான் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். 


தற்போதைய நிலை என்ன..?


சையதா லுலு மின்ஹாஜ் சைதி குறித்து செய்திகள் வெளியிட்டவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு உணவும் வழங்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | சீனாவில் போட்டோ எடுத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கம்பி எண்ணிய நபர்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ