அமெரிக்காவின் ஜார்ஜியாவில் வசிக்கும் 37 வயது நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிவந்துள்ளது. இந்த நபர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். அவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது உடல் வீட்டிற்கு வெளியே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், இறுதி சடங்குகளை செய்ய தான் அமெரிக்கா (America) செல்ல விரும்புவதாகவும், அதற்கு தனக்கு உதவ வேண்டும் எனவும் அவரது மனைவி மத்திய அரசிடம் கோரியுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர், ஜார்ஜியாவில் மளிகை கடை நடத்தி வந்த தெலுங்கானாவின் ஹைதராபத்தை (Hyderabad) முகமது ஆரிப் மொஹியுதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜார்ஜியாவில் மளிகை கடை நடத்தி வந்தார்.
மொஹியுதீனின் மனைவி மெஹ்னாஸ் பாத்திமா, "நானும் என் தந்தையும் அவசர விசாவில் அமெரிக்கா செல்ல ஏற்பாடு செய்யுமாறு மத்திய அரசாங்கத்திடம் (Central Government) வேண்டுகோள் விடுக்கின்றோம். இதனால் நாங்கள் ஆரிஃப்பின் இறுதி சடங்குகளை செய்ய முடியும்" எனக் கூறியுள்ளார். மளிகைக் கடையின் சி.சி.டி.வி காட்சிகளில், ஒரு ஊழியர் உட்பட தாக்குதல் நடத்திய பலர் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
பாத்திமா அவர்கள் கூறுகையில், 'ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணியளவில், நான் ஆரிப்பை தொலைபேசியில் அழைத்து பேசினேன், அவர் அரை மணி நேரத்தில் மீண்டும் அழைப்பதாக பதிலளித்தார், ஆனால் எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. இதற்குப் பிறகு, கணவரின் சகோதரி மூலம், என் கணவர் அடையாளம் காணப்படாத சிலரால் குத்திக் கொல்லப்பட்டார் என்பதை அறிந்தேன்.
தற்போது, ஆரிஃப்பின் உடல் ஜார்ஜியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உள்ளது. வேறு எந்த குடும்ப உறுப்பினரும் அங்கு இல்லை. தெலுங்கானாவைச் சேர்ந்த கட்சியான மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக்கின் செய்தித் தொடர்பாளர் உல்லா கான், வெளியுறவு அமைச்சர் எஸ்.கே. ஜெய்சங்கர் (S.Jaishankar) மற்றும் அமெரிக்காவின் இந்திய தூதர் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், இறந்தவர்களின் குடும்பங்கள் அமெரிக்கா செல்ல உதவுமாறு கோரியுள்ளார்.
ALSO READ | ஷாரூகானின் பிறந்த நாளுக்கு ஜூஹிசாவ்லா வழங்கிய பரிசு..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR