அமெரிக்கா மற்றும் வளரும் நாடுகளில் வைரஸை கட்டுப்படுத்துவது எளிதாக இல்லை என்பதை கருத்தில் கொண்டு, இன்னும் மூன்று வருடத்தில் இயல்பு நிலை திருப்பும் என முன்னர் கூறியது. இப்போது, மேலும் ஒரு வருடம் நீட்டித்து, 2024 ஆம் ஆண்டிற்கு முன் இயல்பு நிலை திரும்பும் வாய்ப்பு குறைவு என  சர்வதேச விமானப் போக்குவரத்து கழகம் கூறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் மாதத்தில்  முழுமையாக முடங்கிய விமான போக்குவரத்து, மீண்டு வருவது போல் தோன்றினாலும், அதன் வளர்ச்சி, ஆமை வேகத்தில் உள்ளது என்று IATA இன் தலைமை பொருளாதார நிபுணர் பிரையன் பியர்ஸ் ( Brian Pearce ) செவ்வாயன்று பத்திரிகையாளர்களுக்கான ஆன்லைன் மாநாட்டின் போது தெரிவித்தார்.


ALSO READ | வயதான பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு… கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன..!!!!


ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனாவில், வணிக  துறையில் மேம்பாடு காணப்பட்டாலும், அதற்கு ஏற்ற அளவில் விமான போக்குவரத்து துறையில், வளர்ச்சி இல்லை என்று பியர்ஸ் கூறினார்.  சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் 94.1% வீழ்ச்சி காணப்பட்டது என்றும் அதே போல் ஜூன் மாதத்தில் போக்குவரத்து 86.5% குறைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


தங்களிடம் உள்ள விமானங்களில், குறைந்த அளவு விமானங்களை இயக்கி வரும் போதிலும், விமான போக்குவரத்து நிறுவனங்களால்,  விமான இருக்கைகளில் 62.9% சதவிகித இருக்கைகள் மட்டுமே நிரம்ப முடிகிறது. சர்வதேச விமான போக்குவரத்தில். 38.9% இருக்கைகள் மட்டுமே நிரம்புகின்றன.


அமெரிக்காவில், சில இடங்களில், விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, அங்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவிலும் ஜெர்மனியிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் பரவல், கோடை கால விடுமுறை காரணமாக மக்கள் அதிக அளவில் பொது இடங்களில் உலவுவதால், தொற்று பரவலும் அதிகரித்துள்ளது.


ALSO READ | ராமர் கோவில் பூமி பூஜைக்கு கவுசல்யா பிறந்த ஊர் மண்ணை எடுத்து செல்லும் முஸ்லிம் பக்தர்


ஜெர்மனியில் உள்ள ராபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் தொற்று பாதிப்பு அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்தார். ஸ்பெயினில் உள்ள மூன்று பிராந்தியங்களுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து ஜெர்மனி பயண எச்சரிக்கை விடுத்தது. பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கும் ஸ்பெயினிலிருந்து திரும்பும் பயணிகள், 14 நாள் குவாரண்டைனில் இருக்க வேண்டும் என  விதித்துள்ளது.