விளாடிமிர் புடின் பெண்ணாக இருந்திருந்தால் போரிட்டிருக்க மாட்டார்: பிரிட்டன் PM போரிஸ் ஜான்சன்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், உக்ரைனை ஒருபோதும் தாக்கியிருக்க மாட்டார் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக ஐரோப்பாவும் கடும் சிக்கலில் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. அதே நேரத்தில், அரசியல் மற்றும் பொருளாதார தடைகளும் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், வெறித்தனமான மற்றும் கட்டாயப் போரைத் தொடங்கியிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
ஜி-7 உச்சிமாநாட்டின் முடிவில் ஜெர்மனியில் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய-உக்ரைன் போருக்கு விளாடிமிர் புடின் தனது பலத்தை வெளிப்படுத்தியதே முக்கிய காரணங்களில் ஒன்று என்று போரிஸ் ஜான்சன் கூறினார். உலக அமைதிக்கான ஒரு படியாக அதிக பெண்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். "புடின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், அவர் ஒரு வெறித்தனமான மற்றும் பலவந்தமான தாக்குதலைச் செய்து இந்த வகையான வன்முறையைச் செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை" என்று ஜான்சன் கூறினார்.
மேலும் படிக்க | ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா
ரஷ்யாவிற்கு தீங்கு விளைவிக்கும் சக்தி
69 வயதான ரஷ்ய ஜனாதிபதியைப் பற்றி குறிப்பிட்டுள்ள போரிஸ் ஜான்சன், சேதப்படுத்தும் சக்தியின் சரியான உதாரணத்தை நீங்கள் எடுத்துக் கூற விரும்பினால், அது புடின் தான் என்று கூறினார். ஜான்சனின் கருத்துகள் குறித்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, "தினமும் அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் நபர் மீது தலைவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்றார்.
மேலும் படிக்க | ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆகின்றன . உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் இணைந்த விவகாரத்தில் ரஷ்யா உக்ரைனை தாக்கியது. பிப்ரவரி 24ம் தேதி முதல் இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு நாட்டு ராணுவ வீரர்களும், பொதுமக்களும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். யுத்தம் காரணமாக உலகில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், இரு நாடுகளும் போரை நிறுத்துவதற்கு முன்வரவில்லை.
மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR