Fresh G7 Sanctions: ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறையை இலக்காகக் கொண்டு புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. நேற்று, ரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 27, 2022, 06:19 PM IST
  • ரஷ்யாவின் பாதுகாப்புத்துறையை முடக்க அமெரிக்கா திட்டம்
  • ரஷ்யாவின் தங்க ஏற்றுமதிக்கு தடை
  • ரஷ்யாவின் உற்பத்தியில் 90 சதவிகித தங்கம் G7 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது
Fresh G7 Sanctions: ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா title=

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறையை இலக்காகக் கொண்டு புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. நேற்று, ரஷ்யாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

ரஷ்ய ஆயுதத் தொழிலுக்கு ஆதரவளிக்கக்கூடிய மேற்கத்திய தொழில்நுட்பத்திற்கான "ரஷ்யாவின் அணுகலை மேலும் கட்டுப்படுத்த G7 தலைவர்கள் இலக்கு விதிக்கப்பட்ட தடைகளை சீரமைத்து விரிவுபடுத்துவார்கள்" என்று வெள்ளை மாளிகை ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகளை தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை (2022, ஜூன் 27) ரஷ்யா மீது புதிய G7 பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அறிவித்தது. இந்த புதிய தடைகள் ரஷ்யாவின் பாதுகாப்புத் துறையை இலக்காகக் கொண்டவை. உக்ரைனில் ரஷ்யா தொடுத்திருக்கும் போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாக இந்தத் தடை பார்க்கப்படுகிறது.

ரஷ்ய ஆயுதத் தொழிலை ஆதரிக்கக்கூடிய மேற்கத்திய தொழில்நுட்பத்திற்கான "ரஷ்யாவின் அணுகலை மேலும் கட்டுப்படுத்த G7 தலைவர்கள் இலக்கு விதிக்கப்பட்ட தடைகளை சீரமைத்து விரிவுபடுத்துவார்கள்" என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்

அதோடு, "ரஷ்யாவின் பாதுகாப்பு விநியோக சங்கிலிகள் ஆக்ரோஷமாக குறிவைக்கப்படும்... மேலும் ரஷ்யாவின் மிருகத்தனமான போரின் போது ஏற்கனவே இழந்த இராணுவ உபகரணங்களை மாற்றும் திறன்களும் கட்டுப்படுத்தப்படும்" என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியின் மீதான விலை வரம்பை நிர்ணயம் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் G7 நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  

"இதை இறுதி செய்ய மற்ற G7 சகாக்களுடன் பேச்சுவார்த்தையை தொடர்கிறோம், G7 தலைவர்கள் ரஷ்ய எண்ணெய்க்கான உலகளாவிய விலை வரம்பை நிர்ணயிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவது தொடரபாக விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க | மூன்றாம் உலகப் போர்? லண்டன் மீது முதலில் குண்டு வீசப்படும்

ரஷ்யாவின் பொருளாதார ஆதரமான ரஷ்ய எண்ணெய் விலையை வலுக்கட்டாயமாக குறைக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் குறிக்கோள்.

இதைத் தவிர, ரஷ்ய ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட அதிக வரியிலிருந்துன் கிடைக்கும் பணத்தை, உக்ரைனுக்கு உதவியாக வழங்க வேண்டும் என்று G7 தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ரஷ்ய பொருட்களின் மீதான எந்தவொரு புதிய கட்டணங்களாலும் கிடைக்கும் வருமானத்தை, உக்ரைனுக்கு உதவியாக அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் பிற G7 தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News