IMF On Economy Growth: இந்தியப் பொருளாதாரம் 6.1 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போக்கு உண்மையாக இருந்தால், அடுத்த ஆண்டுக்குள் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆகியவற்றால் உலகப் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதும். மேலும், உலகம் கடுமையான உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், சமீபத்திய கணிப்ப்பின்படி, "2001க்கு பின்பு மிகவும் மோசமான வளர்ச்சி விகிதம் இது" என்று IMF தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது, அதன் ஜூலை மாத கணிப்புடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 0.2 சதவீத புள்ளிகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச நாணய நிதியம் செவ்வாயன்று (2022, அக்டோபர் 11) தெரிவித்து இருக்கிறது. சமீபத்திய தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 2.7 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சிக் காணும் என்றால்,  சில நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்று ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.



"இன்னும் மோசமான நிலை ஏற்படலாம். பலருக்கு 2023 மந்தநிலையாக இருக்கும்" என்று என்று IMF தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது செய்தியில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | உலக வங்கி - IMF கூட்டங்களில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்!


கடந்த ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் உலகப் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் கடுமையான உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், ராய்ட்டர்ஸ் படி, "2001 க்குப் பிறகு மிகவும் பலவீனமான வளர்ச்சி விவரம்" சமீபத்திய கணிப்பு என்று IMF கூறியது.


தற்போதைய நிதி நெருக்கடிக்குப் பின்னால் உள்ள சாத்தியமான காரணங்களில் ஒன்றாக சீனாவின் பொருளாதார மந்தநிலையையும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கருதுகிறது. கோவிட் தொற்று பரவாமல் தடுக்க சீன அரசாங்கம் குடிமக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில், அந்நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.


மேலும் படிக்க | அயோடின் மாத்திரைகள் அணுகுண்டு தாக்குதலை தடுக்குமா? விற்பனை மும்முரம்


அமெரிக்கா மற்றும் சீனா போன்ற முக்கிய பொருளாதாரங்கள் 2023 ஆம் ஆண்டில் மிக மந்தமான அளவிலேயே வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்தியப் பொருளாதாரம் 6.1 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போக்கு உண்மையாக இருந்தால், அடுத்த ஆண்டுக்குள் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா மாறும்.


நடப்பு நிதியாண்டில் இந்தியா 7.4 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று ஜூலை மாதம் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.


"வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு, 2022ம் ஆண்டு கொடுத்த அதிர்ச்சிகள் அதிகமானது. தொற்றுநோயைத் தொடர்ந்து ஓரளவு மட்டுமே மீண்டு வந்த நாடுகளுக்கு மீண்டும் பொருளாதார பின்னடைவு ஏற்படும்" என்று அறிக்கை கூறியது.


மேலும் படிக்க | ஐநாவில் ரஷ்யாவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை இந்தியா நிராகரித்தது ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ