ஆன்மீக நகரமான உஜ்ஜயினியில் மகாகாலேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 11, 2022) தொடங்கி வைத்தார். ஆண்டு முழுவதும் பக்தர்கள் குவியும் நாட்டிலுள்ள 12 'ஜோதிர்லிங்கங்களில்' ஒன்றான மஹாகாளேஷ்வர் கோயில், இந்துக்களின் புனித இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
'ஸ்ரீ மஹாகால் லோக்' என்று அழைக்கப்படும் வழித்தடத்தின் முதல் கட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடி உஜ்ஜயினியில் உள்ள மஹாகல் கோவிலில் பூஜை செய்தார். மோடி, பாரம்பரிய வேட்டி உடையணிந்து, மாலை 6 மணியளவில் மகாகாள் கோயில் கருவறைக்குள் நுழைந்தார். அவருடன் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரும் சென்றனர்.
இந்த நடைபாதையில் வரிசையாக 108 அலங்கரிக்கப்பட்ட மணற்கல் தூண்கள், மேல் அலங்கார 'திரிசூலம்' வடிவமைப்பு மற்றும் அதன் முகத்தில் சிவபெருமானின் 'முத்திரைகள்' மற்றும் தெய்வத்தின் கலை சிற்பங்கள் மற்றும் சிவபுரத்தின் கதைகளை சித்தரிக்கும் 53 ஒளிரும் சுவரோவியங்களால் சூழப்பட்ட நீரூற்றுகள் உள்ளன.
மகாகல் லோக் திட்டத்தின் முதல் கட்டம், உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளை வழங்குவதன் மூலம் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும். இந்தத் திட்டம் அப்பகுதி முழுவதிலும் நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பாரம்பரிய கட்டமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது.
மேலும் படிக்க | Ujjain: உஜ்ஜைன் மகாகாளேஷ்வர் காரிடார்: ஒரு பார்வை
இத்திட்டத்தின் கீழ், கோயில் பிரகாரம் ஏறக்குறைய ஏழு மடங்கு விரிவுபடுத்தப்படும். மேலும் தற்போது ஆண்டுக்கு 1.5 கோடியாக இருக்கும் பக்தர்கள் வருகை எண்ணிக்கை, இதை அடுத்து இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு சுமார் 850 கோடி ரூபாய் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் மேம்பாட்டு பணிகள் இரண்டு கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது. மகாகால் காரிடாரில் 108 ஸ்தம்பங்கள் (தூண்கள்) உள்ளன, அவை சிவபெருமானின் ஆனந்த தாண்டவ் ஸ்வரூபத்தை சித்தரிக்கின்றன. சிவபெருமானின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பல சிற்பங்கள் மகாகல் பாதையில் நிறுவப்பட்டுள்ளன.
சிவபுராணக் கதைகளான விநாயகரின் பிறப்பு, தக்ஷனின் கதை உள்ளிட்ட போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சுவர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2.5 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் மகா காள் காரிடார், தாமரை குளத்தால் சூழப்பட்டுள்ளது மற்றும் நீரூற்றுகளுடன் சிவன் சிலை உள்ளது. முழு வளாகமும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தால் 24x7 கண்காணிக்கப்படும்.
மேலும் படிக்க | IDBI வங்கி தனியார் மயமாக்கல் குறித்து நிதியமைச்சகம் வழங்கிய முக்கிய தகவல்!
மேலும் படிக்க | e-rupee: பாதுகாப்பான பணப்பரிமாற்றத்திற்கு இந்திய அரசின் முதல் டிஜிட்டல் ரூபாய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ