புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் செப்டம்பர் 3 வெள்ளிக்கிழமை அன்று தாலிபான்கள் புதிய அரசு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய இஸ்லாமிய அரசாங்கத்தில் முக்கிய நியமனங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான், ஆப்கானின் புதிய அரசின் சுப்ரீம் லீடராக ஹைபத்துல்லா அஹுன்ஸாடா புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் என அறிவித்துள்ளது.  முன்னதாக, "தாலிபானின் (Taliban) தலைவரான முல்லா ஹைபத்துல்லா அஹுன்ஸாடா (Haibatullah Akhunzada), புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராகவும் இருப்பார்" என்று தாலிபானின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி தகவல் தெரிவித்தார்.


"நாங்கள் அறிவிக்கும் இஸ்லாமிய அரசு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். அரசாங்கத்தில் விசுவாசமான தளபதியான ஹைபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பதில் சந்தேகம் இல்லை. அவர் அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக இருப்பார்," என்று அவர் மேலும் கூறினார்.


தாலிபானின் (Taliban) இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. அவர் அன்றாட விவகாரங்களின் பொறுப்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | Haibatullah Akhunzada: இவர் தான் ஆப்கானின் சுப்ரீம் லீடர் என அறிவித்த தாலிபான்

மேலும், சிராஜுதீன் ஹக்கானி ஒரு செல்வாக்கு மிக்க செயல்பாட்டுத் தலைவரும், தலிபான் இயக்கத்தின் நிறுவனர் முல்லா முஹம்மது உமரின் மகனுமான மவ்லவி முஹம்மது யாகூபிற்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பதவி ஏற்பு விழாக்கள் அதிபர் மாளிகையில் நடைபெறும் என்று ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டின் கலாச்சார ஆணையத்தின் மல்டிமீடியா கிளையின் தலைவர் அகமதுல்லா முத்தாகி கூறினார்.


புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அமைப்பின் பெயர், தேசியக் கொடி அல்லது தேசிய கீதம் போன்ற பிற விவரங்கள் நடைபெற உள்ளதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.


தாலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசனைகளை நடத்தி,  இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறினாலும், அமைப்பின் பெயர், தேசியக் கொடி அல்லது தேசிய கீதம் குறித்து விவாதங்கள் நடத்தப்படவில்லை என்று டோலோ நியூஸ் (Tolo News) தெரிவித்துள்ளது.


ALSO READ: ஆப்கானிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்; அடுத்தது என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR