லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது பதவிக் காலத்தில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று (2022 டிசம்பர் 19) பேசிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான், “எனது மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பினேன், ஆனால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. ஒரு தடையாக மாறியது" என்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய 70 வயதான இம்ரான் கான், அப்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா, இந்தியாவுடன் சிறந்த உறவை வைத்துக் கொள்ள இன்னும் அதிக விருப்பம் கொண்டிருந்தார் என்றும் கூறினார்.


லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள அவரது இல்லத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழுவுடனான செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய இம்ரான் கான், 2019 ஆம் ஆண்டில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு, இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தனது அரசாங்கம் வலியுறுத்தவில்லை என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | எலான் மஸ்க் ராஜினாமா ? - ட்விட்டர் வாக்கெடுப்பை சம்மதிப்பாரா... சமாளிப்பாரா..


இந்தியா முதலில் தனது முடிவை மாற்றிக் கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார் இம்ரான் கான்.


இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, இந்தியாவுக்கான வெளியுறவுக் கொள்கை என்னவாக இருந்தது என நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அந்நாள் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.


இந்தியாவுக்கான வெளியுறவுக் கொள்கையை நிர்ணயித்தது அப்போதைய பிரதமராக இருந்த இம்ரான் கானா அல்லது ஜெனரல் பஜ்வாவா என்ற கேள்விக்கு பதிலளித்த இம்ரான் கான், "நான்தான் அன்றைய பிரதமர்... நானே வெளியுறவுக் கொள்கையை நிர்ணயித்தேன்" என்று பதிலளித்தார். ஜெனரல் பஜ்வா இந்தியாவுடன் சிறந்த உறவை வைத்திருக்க ஆர்வமாக இருந்தார் என்றும் கான் குறிப்பிட்டார்.


ஜெனரல் பாஜ்வா தான் முடிவுகளை எடுப்பதால், தனது பதவிக்காலத்தில் தனக்கு அதிகாரம் இல்லை என்று இம்ரான் கான் சமீபத்தில் கூறியிருந்த நிலையில், நேற்றாஇய அவரது பேட்டி முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது.


மேலும் படிக்க | கட்சியிலிருந்து என்னை துரத்துவதே லட்சியமா? தமிழக பாஜகவினரை திட்டும் காயத்ரி ரகுராம்


காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதால் நரேந்திர மோடி வெற்றி பெறுவார் என்று இந்தியாவில் தேர்தலுக்கு முன்பு இம்ரான் கான் தெரிவித்திருந்ததை வெளிப்படுத்தியதை நினைவுபடுத்திய கான், மோதலை வலதுசாரி கட்சித் தலைவரான நரேந்திர மோடியால் மட்டுமே தீர்க்க முடியும் என்று இன்னும் நம்புவதாக தெரிவித்தார்.  


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்தியா குறித்து அவ்வப்போது பேசி வருகிறார். 2018 முதல் சில மாதங்களுக்கு முன்பு வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், கூட்டணிக் கட்சிகளே திடீரென அவருக்கு எதிராகத் திரும்பியதால் பதவி விலகும் சூழல் ஏற்பட்டது.


பாகிஸ்தானில் தற்போது, ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி நடைபெற்று வருகிறது. வெளிநாட்டுச் சதி காரணமாகவே தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இம்ரான் கான் தொடர்ந்து கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கடலில் மிதக்கும் நகரம்; ராட்சஸ கடல்மீன் வடிவில் 7000 பேர் வசிக்க கூடிய அதிசய நகரம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ