கட்சியிலிருந்து என்னை துரத்துவதே லட்சியமா? தமிழக பாஜகவினரை திட்டும் காயத்ரி ரகுராம்

Gayathri Raguram Twitter Question: 8 ஆண்டு பாஜக உறுப்பினராக இருக்கும்  தமிழக பாஜக தொண்டர் காயத்ரி ரகுராம் வலுவான பாஜக காரியகர்த்தாவா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 20, 2022, 09:18 AM IST
  • யாரை தலைவராக தொடர்வது? காயத்ரி ரகுராம் கேள்வி
  • தொடர்ச்சியான தாக்குதல்களை 8 ஆண்டுகளாக எதிர்கொள்ளும் தமிழக பாஜக தொண்டர்
  • வலுவான பாஜக காரியகர்த்தா காயத்ரி ரகுராம்?
கட்சியிலிருந்து என்னை துரத்துவதே லட்சியமா? தமிழக பாஜகவினரை திட்டும் காயத்ரி ரகுராம் title=

சென்னை: ”பாஜகவில் இருந்து என்னை துரத்துவதுதான் உங்கள் லட்சியமா? தொடர்ச்சியான தாக்குதல். பிறகு நான் எப்படி ஒரு தலைவரைப் பின்பற்றுவது? இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கும் போது.. எப்படி? இந்த உத்திகளை நான் 8 ஆண்டுகளாக எதிர்கொண்ட நிற்கிறேன். நான் இன்னும் வலுவான பாஜக காரியகர்த்தா மட்டுமே” என்று காயத்ரி ரகுராம் போட்ட டிவிட்டர் பதிவு வைரலாகிறது.

என்மீது சுமத்தப்படும் எல்லாப் பழிகளையும் நான் அறிவேன். பலர் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளாக இருப்பதால், அனைத்து திணிக்கப்பட்ட IB அறிக்கைகளும் எனக்குத் தெரியும். எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளும் தர்மமும் என் பக்கத்தில் இருப்பதாக எனக்குத் தெரியும். என்றும் காயத்ரி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நான் நான் இடைநீக்கத்தில் இருக்கிறேன், நான் ஒரு எளிதான இலக்காக இருக்கிறேன், ஆனால், நான் ஒரு பெண்ணாக வலுவாக நிற்பேன் என்று காயத்ரி மேலும் ஒரு டிவிட்டர் பதிவு போட்டிருக்கிறார்.

பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், பாரதிய ஜனதா கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, கட்சியில் இருந்து ஆறு மாத காலத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் படிக்க | மோடிஜியை கண்டு வியந்து மகிழ்கிறேன் - காசியில் இளையராஜா பேச்சு

பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காயத்ரி ரகுராம், என்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல் என்னை கட்சியை விட்டு நீக்கி உள்ளனர் என்று வருத்தம் தெரிவித்திருந்தார். அதேபோல, ”நான் பாஜகவிற்கு களங்கம் விளைவிப்பதாக கூறுகின்றனர். இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. பாஜகவிற்கு நான் எதிரானவள் என அண்ணாமலை கூறினால் அவரையும் நான் எதிர்ப்பேன்” எனத் தெரிவித்திருந்தார். 

மேலும், 5 பைசா ஆதாயம்  இல்லாமல் கடன் வாங்கி மக்களுக்கு உதவி செய்தேன். 8 வருடமாக கட்சிக்கு உழைத்து உள்ளேன். உண்மையை பேசியதால். என்னை கட்சியை விட்டு நீக்கி உள்ளர்கள். நான் பாஜக விற்கு களங்கம் விளைவித்ததாக கூறுவது தவறு என்று காயத்ரி தெரிவித்து வருகிறார்.

பாஜகவிற்கு எதிராக தான் செயல்படுவதாக யார் கூறினாலும் அவர்களை எதிர்ப்பதாகக் கூறியிருந்த காயத்ரி, காசி தமிழ்சங்கத்தில் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய வருத்தம் அளித்தது என்றும், அதற்கான ஆலோசனைக் கூட்டங்களிலும் தன்னைப் புறக்கணித்ததாக வேதனை தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | NO PEN PLEASE: சட்டசபை வளாகத்திற்கு பேனா கொண்டு வர தடை விதித்த மாநிலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News