மூன்றே நாளில் 8 லட்சம் பேருக்கு கொரோனா.. ஆபத்தான நிலையில் வடகொரியா
வடகொரியாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 42 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. கடந்த 2 ஆண்டுகளாக தங்களது நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மறுத்து வந்த வடகொரியா, கடந்த 12-ம் தேதி நாட்டில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் உலக சுகாதார அமைப்பும், சீனாவும் வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வடகொரியா ஏற்கவில்லை. அந்நாட்டு மக்கள் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து மர்ம காய்ச்சல் பரவி வருவதாக வடகொரிய அரசு அறிவித்தது.
மேலும் படிக்க | வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி
கடந்த 3 நாட்களில் மட்டும் வடகொரியாவில் 8,20,620 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 42 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வடகொரியா உருவானதில் இருந்து இவ்வளவு வீரியம் மிக்க நோய் பரவுவது இதுவே முதல் முறை என அதிபர் கிம் ஜாங் உன் குறிப்பிட்டுள்ளார். மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்டுள்ள வடகொரியாவில், தடுப்பூசிகள், வைரஸ் தடுப்பு மருந்துகள், அதிக கொரோனா பரிசோதனை திறன் இன்றி, எவ்வாறு தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்பது குறித்து நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கிம் மற்றொரு அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக அமெரிக்காவும் தென் கொரியாவும் எச்சரித்துள்ளன. இது வடகொரியாவின் ஏழாவது அணுகுண்டு சோதனையாகும். தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மக்களை திசை திருப்புவதற்காக கிம் ஜாங் உன் அணுகுண்டு சோதனை திட்டத்தை விரைவுபடுத்தக்கூடும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் படிக்க | வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா...நாடு முழுவதும் ஊரடங்கு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe