வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா...நாடு முழுவதும் ஊரடங்கு

வடகொரியாவில் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : May 12, 2022, 04:45 PM IST
  • வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா
  • நாடு முழுவதும் ஊரடங்கு
  • அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு
வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா...நாடு முழுவதும் ஊரடங்கு title=

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவியது. இதனைத் தொடர்ந்து தனது எல்லைகளை மூடிய வடகொரியா, தங்களது நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறி வந்தது. 

உலக சுகாதார அமைப்பு, சீனா மற்றும் ரஷ்யாவினால் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளையும் வடகொரியா நிராகரித்தது. அந்நாட்டிலுள்ள சுமார் இரண்டரை கோடி மக்களும் தடுப்பூசி போடவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனாவை எதிர்கொண்டதற்காக நாட்டு மக்களுக்கு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ அணிவகுப்பில் வெளிப்படையாக நன்றி தெரிவித்தார். 

மேலும் படிக்க | இனிமேல் தடுப்பூசி வேண்டாம்! நம்முடைய ஸ்டைலில் பார்க்கலாம் !வடகொரியா அதிபர் அதிரடி!

ஜனவரி 3, 2020 முதல் இந்த ஆண்டு மே 11 வரை நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என வடகொரியா கூறி வந்தது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. பியோங்யாங் நகரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த மாதிரிகளை பரிசோதித்ததில், மிக வேகமாக பரவக் கூடிய ஒமைக்ரான் வைரசின் திரிபுடன் ஒத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். குறுகிய காலத்திற்குள் கொரோனாவை வேரோடு அகற்றுவதே குறிக்கோள் எனவும், விழிப்புணர்வின் காரணமாக ஊரடங்கை சமாளித்து கொரோனாவை நிச்சயமாக வெல்வோம் எனவும் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | வடகொரியாவின் மேம்பட்ட அணுகுண்டு செயல்திறன் சோதனை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News