அதிபர் தேர்தல் நெருங்குவதால், அமெரிக்காவில் உள்ள இந்துக்களின் வாக்கை கவர, ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் நவராத்ரி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாஷிங்டன்: நவராத்திரி திருவிழாவின் தொடக்கத்தில் இந்துக்களை வாழ்த்திய ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது துணையான கமலா ஹாரிஸ் ஆகியோர் சனிக்கிழமையன்று தீமைகளை வென்றெடுப்பதை வாழ்த்தினர்.


"நவராத்திரி என்னு இந்து திருவிழா தொடங்கும் இந்த நல்ல நேரத்தில், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் கொண்டாடும் அனைவருக்கும்  எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மீண்டும் நன்மை தீமையை வெல்லட்டும். இந்த நவராத்திரி அனைவருக்கும், நல் வாழ்வினை அளிக்கட்டும்" என்று பிடென் சனிக்கிழமை ட்வீட் செய்தார்.


77 வயதான ஜோ பிடென், நவம்பர் 3  அமெரிக்க அதிபர் தேர்தலில்,  குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக போட்டியிடுகிறார்.


ஒபாமா நிர்வாகத்தில், அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த, ஜோ பிடென் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடத்த  நடவடிக்கை எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ | US Election: ஜோ பிடன், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக களம் இறங்குகிறார் ஒபாமா..!!!


ஒரு பெரிய கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க மற்றும் கறுப்பின பெண்மணி என்ற பெருமையை பெற்று அமெரிக்க அரசியலில் வரலாற்றை எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர் கமலா ஹாரிஸ், நவராத்திரிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


" இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது நவராத்திரி வாழ்த்துக்கள், நவராத்ரி கொண்டாடும் அனைவருக்கும், மிகவும் மகிழ்ச்சியான நவராத்திரியாக இருக்கட்டும்! இந்த விடுமுறை நமது சமூகங்களை மேம்படுத்துவதற்கும், மேலும் அனைவரையும் உள்ளடக்கிய அமெரிக்காவைக் கட்டியெழுப்ப நம் அனைவருக்கும் இது ஒரு உத்வேகமாக இருக்கட்டும்," என 55 -ஒரு வயதான செனட்டர் ஹாரிஸ் ட்வீட் செய்துள்ளார்.


ALSO READ | பிரான்சில் வகுப்பில் நபிகள் நாயகத்தின் கார்டூனை காண்பித்த ஆசிரியர் தலை வெட்டி கொலை ..!!!


பிடென் மற்றும் ஹாரிஸ் இருவரும் இந்த ஆண்டு தேர்தலில் முக்கியமான வாக்கு வங்கியாக இருக்கும் இந்து சமூகத்திற்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை அனுப்பி வருகின்றனர்.


ஆகஸ்ட் மாதம், அவர்கள் கணேஷ் சதுர்த்தி தினத்திலும் அமெரிக்காவில் உள்ள இந்து சமூகத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்


அமெரிக்காவில் 40 லட்சம்  இந்திய-அமெரிக்க மக்கள் தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 2020 அதிபர் தேர்தலில், இந்தியர்கள் முக்கிய வாக்கு வங்கியாகும்.  டெக்சாஸ், மிச்சிகன், புளோரிடா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான இந்திய-அமெரிக்க வாக்காளர்கள் உள்ளனர்.


இந்திய-அமெரிக்க வாக்காளர்களை கவரும் வகையில், சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படமான 'லகான்' இன் பிரபலமான "சாலே சலோ" பாடலின் இசை வீடியோ ரீமிக்ஸ் செய்து, தேர்தல் பிரச்சாரத்திற்கான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் கடந்த மாதம் வெளியிட்டனர்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe