விந்தை மனிதர்... ₹12 லட்சம் செலவழித்து நாய் வாழ்க்கை வாழும் நபர்... வைரல் வீடியோ!
ஜப்பானியர் `டோகோ` நாயாகவே வாழ்ந்து வருகிறார். தனது வித்தியாசமான ஆசையை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ.12 லட்சம் செலவு செய்து நாய் உடை தயாரித்து அணிந்துள்ளார்.
டோக்கியோ: ட்விட்டரில் 'டோகோ' என்று அழைக்கப்படும் ஜப்பானியர் நாயாக வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு, டோகோ சுமார் ரூ.12 லட்சத்தை செலவு செய்து, எஆயை போன்று தோற்றமளிக்கும் வகையிலான உடை ஒன்றை தயார் செய்தார். அப்போதிருந்து, அவர் தனது 'நாய் வாழ்க்கை' பற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் தனது யூடியூப் சேனலிலும் பதிவிட்டு வருகிறார். தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான ஆடைகளை தயாரிக்கும் ஜப்பானிய நிறுவனமான Zeppet நிறுவனம், Toco என்ற அந்த நபருக்காக நாய் உடையை வடிவமைத்துள்ளது. இதை தயாரிக்க நிறுவனம் 40 நாட்கள் எடுத்துக் கொண்டது.
டோகோவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இன்று மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் டோகோ தனது சில நாய் நண்பர்களுடன் மேற்கொண்ட தனது முதல் நடைப்பயணத்தைக் காணலாம். டோகோவின் நண்பர்களுக்கு அவரது மாற்றம் தெரியாத வகையில், அவர் தனது நாய் உடையிலேயே வருகிறார். அவரது ஒவ்வொரு வீடியோவிலும், டோகோ எப்போதும் ஒரு நாய் உடையில் காணப்படுகிறார். மேலும் அவரது முகத்தை ஒருபோதும் வெளிப்படுத்துவதில்லை.
ஆடைக்கு 16 ஆயிரம் டாலர்கள் செலவிட்ட டோகோ
டோகோ தனது பொழுதுபோக்கைப் பற்றி அவளுடைய நண்பர்கள் அறிந்தால், அவர்கள் அதை மிகவும் விசித்திரமாக நினைப்பார்கள் என்று பயப்படுகிறார். ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவில், டோகோ ஒரு நாயாக பூங்காவில் நடந்து செல்வதைக் காணலாம். வீடியோ சமூல வலைதளங்களில் மிகவும் வைரலாக ஆகி வருகிறது. 'டோகோ என்று அழைக்கப்படும் ஜப்பானியர் ஒருவர், நாயாக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றுவதற்காக ஒரு ஆடைக்காக $16,000 செலவு செய்தார். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு கூட அவரது அடையாளம் தெரியாமல் உள்ளது.
வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:
நெட்டிசன்கள் வழங்கிய ஆதரவு
முன்னதாக டெய்லிமெயிலிடம் பேசிய டோகோ இதை 'மாற்றத்திற்கான ஆசை' என்று குறிப்பிட்டார். படங்கள் மற்றும் வீடியோக்களில், டோகோ ஒரு வலுவான பெரிய நாயைப் போல தோற்றமளிக்கிறார். மேலும் ஒரு நாயைப் போல நான்கு கால்களில் நடந்து கொண்டிருக்கிறார். டோகோ தனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் இந்த ரகசியத்தை வெளிப்படுத்த பயப்படுகிறார் என்றாலும், அவர் தனது ஆன்லைன் வட்டம் மற்றும் சமூக ஊடக தளங்களில் பின்தொடர்பவர்களிடமிருந்து நிறைய ஆதரவைப் பெற்று வருகிறார். ஜப்பானியர் 'டோகோ' நாயாகவே வாழ்ந்து வருகிறார். தனது வித்தியாசமான ஆசையை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ.12 லட்சம் செலவு செய்து நாய் உடை தயாரித்து அணிந்துள்ள செய்தி பலருக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
அண்மையில் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அழகான நாய் ஒன்று நடப்பது, குறைப்பது என பல சேட்டைகளை செய்வதைக் காணலாம். இறுதியில் அந்த நாய் பேசத் தொடங்கிய பிறகுதான் நாய் வேடத்தில் ஒரு நபர் இருக்கிறார் என்பது தெரிய வருகின்றது. அவருக்கு நீண்ட காலமாக ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உலகில் பஞ்ச அபாயம், தானிய பற்றாக்குறை அதிகரிக்கும்! நேட்டோவுக்கு ரஷ்யாவின் சவால்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ