உலகில் பஞ்ச அபாயம், தானிய பற்றாக்குறை அதிகரிக்கும்! நேட்டோவுக்கு ரஷ்யாவின் சவால்

Russia Ukraine War Russia Vs Nato: ஐரோப்பா முழுவதும் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும் என்று நேட்டோ தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புடின்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 30, 2023, 11:38 AM IST
  • தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா பின்வாங்கிய ரஷ்யாவின் எச்சரிக்கை
  • ஐரோப்பா முழுவதும் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும்
  • நேட்டோ தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்ய அதிபர் புடின்
உலகில் பஞ்ச அபாயம், தானிய பற்றாக்குறை அதிகரிக்கும்! நேட்டோவுக்கு ரஷ்யாவின் சவால் title=

மாஸ்கோவை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல், ரஷ்யாவில் உக்ரைன் பெரும் தாக்குதலை நடத்தியது. இதனால், மாஸ்கோவில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் ஆத்திரமடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஐரோப்பா முழுவதும் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கும் தொனியில் நேட்டோ தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் தொடங்கிய போர் இன்னும் நீடிக்கிறது. நெட்டோவுக்கு தற்போது எச்சரிக்கை விடும் புடின், உக்ரைன் மீது போர் தொடுத்ததிற்கும் நேட்டோவுடனான முரண்பாடுகளே காரணம் என்பது ஆச்சரியமானது. நேட்டோவில் இணைய உக்ரைன் முன்வந்ததையடுத்து ரஷ்யா போரை முன்னெடுத்தது. இந்தப் போரின் தாக்கம் உக்ரைன் நாட்டு பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்விலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால், ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கி ஓராண்டான பிறகும்கூட நேட்டோவில் உக்ரைன் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதியுதவி போன்றவற்றை வழங்கி வருகிறது. 

இந்த நிலையில், ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியாகும் தானிய விநியோகத்தை சீர்குலைக்க வாக்னரை அனுப்பலாம் என்று ரஷ்யா சூசகமாக தெரிவித்திருப்பது, நேட்டோவுக்கு மற்றொரு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலால் மிகவும் கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஐரோப்பாவின் தானிய விநியோகத்தை சீர்குலைக்க ரஷ்யா இப்போது தனது தனியார் ராணுவமான வாக்னரை அனுப்பலாம் என்று செய்திகள் வருகின்றன.

மேலும் படிக்க | சீனாவில் போட்டோ எடுத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கம்பி எண்ணிய நபர்..!

ரஷ்யா-உக்ரைன் போர் அண்மைச் செய்தி

அண்மயில், உக்ரைன் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தியது, இந்தத் தாக்குதலில், இதுவரை உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் இரவில் மாஸ்கோவை தாக்கியதில், இரண்டு அரசு கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு முன்னதாக, ரஷ்யா ருமேனியாவில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது, அதில் தானியக் கிடங்குகள் குறிவைக்கப்பட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஐரோப்பாவிற்கு தானியம் அனுப்பும் இடங்களை ரஷ்யா குறி வைத்து தாக்கினால், ஐரோப்பாவில் உணவுச் சிக்கல் அதிகரிக்கும்.  
 
பட்டினியால் வாடும் அபாயத்தில் ஐரோப்பா

ரஷ்யாவின் தனியார் ராணுவமான வாக்னர், ஆப்ரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் தானியக் கடைகள் அழிக்கப்பட்டால், ஐரோப்பாவில் ரேஷன் மற்றும் தானிய நெருக்கடியால் பட்டினியின் ஆபத்து அதிகரிக்கலாம்.

கருங்கடல் தானிய ஒப்பந்தம்  

அதிக மகசூல் தரும் கோதுமை மற்றும் பிற தானியங்கள் உற்பத்திக்கு பெயர் பெற்ற கருங்கடலின் சுற்றியுள்ள பகுதியின் ஏற்றுமதியை ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் பாதித்தது. ரஷ்யா-உக்ரைன் மோதல் உலகெங்கிலும் உள்ள உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானியங்களை கொண்டு செல்வதில் தடையை ஏற்படுத்தியது.

கூடுதலாக, ரஷ்யா தனது தானிய ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி, நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதன் விளைவாக உலக உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டது, மேலும் ரஷ்யா உணவுப் பொருட்களை ஆயுதமாக்குகிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. 

மேலும் படிக்க | வெளிநாட்டில் பிச்சை எடுக்கும் இந்திய பெண்..! படிக்க சென்றவருக்கு நேர்ந்த கொடுமை..! 

இந்த பிரச்சனையை தீர்க்க, கருங்கடலில் இருந்து கடல் வழிகளை கட்டுப்படுத்தும் துருக்கியின் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முடிவில் கருங்கடல் தானிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஜூலை 2022 இல் கையெழுத்தான ஒப்பந்தம் 

ரஷ்யாவும் உக்ரைனும் ஜூலை 2022 இல் இஸ்தான்புல்லில், இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. ஐக்கிய நாடுகள் சபையுடன் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, கருங்கடல் துறைமுகங்களில் இருந்து உக்ரேனிய தானியங்கள் மற்றும் பிற விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தம் முதலில் நான்கு மாதங்களுக்கு அமலில் இருந்தது. நவம்பர் 2022 நடுப்பகுதியில், இது மார்ச் 18, 2023 வரை 120 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதற்கு இன்னொரு நீட்டிப்பு கிடைத்தது. ரஷ்யா கோபமடைந்தது, எனவே ஜூலையில் ரஷ்யா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை ரஷ்யா உடைத்தது

ஜூலை தொடக்கத்தில் இருந்து ரஷ்யா ஆக்ரோஷமாக உள்ளது. கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா இந்த மாதம் விலகிக் கொண்டது. இதற்கு முன்னதாக மே 17 அன்று, ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை 60 நாட்களுக்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியின் காரணமாக அதிருப்தி அடைந்த நிலையில், ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஜூலை மாதம் இறுதியில் தனது முடிவை ரஷ்யா அறிவித்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா பின்வாங்கியது சர்வதேச அளவில் கவலைகளை அதிகரித்தது  

மேலும் படிக்க | 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் மாதம் ஐந்தரை லட்சம் ரூபாய்! இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News