புதுடில்லி: 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பெரும்பாலானோருக்கு மிகவும் நெருக்கடியான சவாலான நேரமாக இருந்தது என்றால், மிகையில்லை. இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக, எந்த உணவகங்களும், தியேட்டர்களும் திறக்கப்படவில்லை. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் 2020 ஆம் ஆண்டின் இறுதியில், உணவகம் ஒன்றில் வேலை பார்க்கும் அமெரிக்காவின் (America)  கியானா டி ஏஞ்சலோவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அமெரிக்காவில் ஒருவர் கிறிஸ்துமஸ் விழாவை கருத்தில் கொண்டு, உணவகத்தில் உண்ட பிறகு, லட்சக்கணக்கில் டிப்ஸ் கொடுத்துள்ளார்.


அமெரிக்காவில் உள்ள 'Anthony's at Paxon' என்ற இத்தாலிய (Italy)உணவகம் பேஸ்புக்கில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளது. இதில் வாடிக்கையாளரின் பில் ரசீதைக் காணலாம். இந்த நபர் சாப்பிட்டதற்கான பில் $205, அதாவது 15 ஆயிரம் ரூபாய், அதற்கு அவர் கொடுத்த டிப்ஸ் $5000, அதாவது ரூ .3.6 லட்சம். இந்த டிப்ஸ் உணவகத்தில் பணியாளராக பணிபுரியும் கியானா டி ஏஞ்சலோவுக்கு வழங்கப்பட்டது.


இந்த அளவிற்கு டிப்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கவேயில்லை எனக் கூறிய கியானா, இதனைக் கொண்டு தனது கல்லூரி படிப்பை முடித்து விடுவேன் என மகிழ்ச்சியுடன் கூறினார்.


இந்த உணவகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் இந்த வாடிக்கையாளர் பாராட்டி பதிவுகள் இடப்பட்டுள்ளன. நன்றி சொல்வதைத் தவிர எங்களுக்கு வார்த்தைகள் இல்லை என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது. எங்கள் ஊழியர்களுக்கு  நீங்கள்கொடுத்த ஆதரவை, உதவியை மறக்க முடியாது எனவும் அந்த பதிவில் கூறியுள்ளனர்.


ALSO READ | உய்குர் முஸ்லிம்களை அடையாளம் காண சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது சீனாவின் அலிபாபா


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR