சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதோடு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் ஏராளமானோர் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றித் தவிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷாங்காயைப் போல பெய்ஜிங் நகரிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங்கிலும் 40க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள், 158 பேருந்து வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. பெய்ஜிங்கில் உள்ள 16 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில், இந்த வாரத்தில் மட்டும் மக்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வாரம் மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை உயிருடன் புதைக்கும் சீனா; அதிர்ச்சி தகவல்


இந்த நிலையில், கொரோனா பரிசோதனைக்காக பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ​​​​கொரோனா பரிசோதனைக்காக ஒரு பெண்ணைத் தரையில் படுக்க வைத்து அவரது கை, கால்களை ஒருவர் பிடித்துக் கொள்ள கவச உடை அணிந்த நபர், அப்பெண்ணில் வாய், மூக்கில் இருந்து வலுக்கட்டாயமாக மாதிரிகளை சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ எந்த நகரத்தில் எடுக்கப்பட்டதென்ற தகவல் தெரியவில்லை. 



இதேபோல், சீன சுகாதாரப் பணியாளர்கள் கடந்த மாதம் ஒரு முதியவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து கொரோனா பரிசோதனை செய்தது, சீன சமூக வலைதளமான வெபிபோ(Weibo)-வில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 



மேலும் படிக்க | Beijing Corona Alert லாக்டவுன் அச்சத்தால் பெய்ஜிங்கின் கடைகளில் காலியாகும் பொருட்கள்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR